பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அவன் கூறும் அறிவுரைவழியே கள், காமம், புலால் முத லிய பாதங்கள் ஒழியவேண்டிய நன்னெறி வாழ்வையும். உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு முதலியவற் றையும் காட்டிச் சமய நெறியையும் அறவாழ்வையும் சாத்தனர் வற்புறுத்துகிறர். இவற்றைப் பின் சமுதாயசமய நெறி காணும்போது நன்கு காணலாம். காயசண்டிகை - உதயகுமரன் முடிவு ஆதிரை யிட்டதை ஏற்ற மணிமேகலை உலக அறவி யில் சென்று அனைவருக்கும் உணவளிக்கிருள். அதற்கு முன் ஆதிரையின் தன்மையை உணர்த்திய காயசண்டி கையின் யானைப்பசியினைப் போக்க, அவள் பசி நீங்கி வித்தியாதர நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிருள். அதே வேளையில் அவள் கணவன் தன் மனைவியிடம், குறித்த கால எல்லை கடக்கும் நிலையில் நேரில் காண வருகின்ருன், உதயகுமாரனல் தனக்கு ஊறு வரும் என உணர்ந்த மணி மேகலை தன் உருவைக் காயசண்டிகையாக மாற்றிக் கொண்டு உலக அறிவிலேயே அறம் செய்கிருள். வந்த வித்தியாதரனுகிய காஞ்சனன் அவளே காயசண்டிகை எனக் கைப்பற்ற நினைக்கிருன். இடையில் மணிமேகலை யைத் தேடி, உதயகுமரன் வர அவன் மறைந்து காண் கிருன். முந்தைப் பிறப்பின் கணவனை உதயகுமரன் வரவே அவனை வணங்கி அறமுரைக்கிருள் மணி மேகலை. இங்கேயும் சாத்தனர் தம் சமய நெறியையும் துறவு நெறியையும் வற்புறுத்துகிறர். மறைந்திருந்த காஞ்சனன் வேறு வகையில் எண்ணுகிருன். மணிமேகலை யினையே காயசண்டிகை எனக் கருதி, அவள் அரச குமரன் வயப்பட்டமையாலேயே தன் நாட்டுக்கு வர வில்லை எனவும் தன்னைப் புறக்கணித்தாள் எனவும் கருதி, மறைந்திருந்து அரசகுமரன் வரவை எதிர்பார்க்கிருன். உலக அறவியிலுள்ள மணிமேகலையை எப்படியும் கொள் ளும் எண்ணத்தோடு இரவில் வருகிற உதயகுமாரன் அவன் வாளால் மடிகிறன். பின் காஞ்சனன் காயசண்டி