பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அரசியல் தொடர்பு இடையில் மணிமேகலை அரசன் துணைக்கொண்டு சிறைக் கோட்டத்தை அறக்கோட்ட மாக்கி, அங்குள் ளார்க்கு உணவு அளித்துக் காப்பாற்றுகிருள். 'அரசன் ஆணையின் ஆயிழை அருளால் கிரயக் கொடுஞ்சிறை நீங்கிய கோட்டம் தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தால் யாப்புடை நல்பிறப் பெய்தினர் போல பொருள்புரி நெஞ்சின் புலவோர் கோயிலும் அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் கட்டுடைச் செல்வர் காப்புடைத் தாயது" –20/1-9 உதயகுமரன் வாளால் வெட்டுண்டதை முனிவரால் அறிந்த அரசன் தன்னுல் கடியப்படவேண்டியவன் காஞ் சனுல் கொல்லப்பட்டமைக்கு வருந்தி மணிமேகலையைச் சிறை செய்கிருன், அரசியின் வஞ்சகம் அரசியோ தன் மகன் மறைவுக்குக் காரணமாய மணி மேகலையைத் தன்னிடம் அனுப்பவேண்டிப் பெற்று, அவ ளைப் பழிவாங்க நினைக்கிருள். மறுபிறப்பறிந்தமையின் பித் திடு மருந்தால் பிழைபடாதும்,ஊனெழி மந்திரத்தால் புழுக் கறை தப்பியும், மாற்றுருவத்தால் மற்ருெரு கொடுமை பிழைத்தும் நின்ற நிலைகண்ட அரசி, அஞ்சி, அவளடி பணிந்து மன்னிப்பு வேண்டுகிருள். முந்தைப் பிறப்பின் கணவனின் தாயானமையின் அக் கொடுமையை மணி மேகலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவளுக்கு அறம் பல உணர்த்துகிருள். சாத்தன்ை ஈண்டு ஐம்பெரும் பாவங். கள் பற்றியும் பிறவற்றையும் விளக்குகிருர். இந்த நிலையில் மணிமேகலையைத் தேடிக்கொண்டு வந்த சித்திராபதி அவ. ளைத் தன்னுடன் அனுப்புமாறுவேண்ட, அரசி மறுக்கிருள்.