பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 அதே வேளையில் மாதவியுடன் அறவண அடிகள் அங்கு வர அனைத்தும் செம்மையாக முடிகின்றது. அடுத்து, இந்திர விழா எடுக்கா நிலையில் அழியப்போகும் புகாரின் நிலையையும் பிறவற்றையும் ஈண்டுச் சாத்தனர் விளக்குகிருர். அறவண அடிகள் வழியே வினைகளைப் பற் றியும் விளக்குகிருர், மணிமேகலை அவர்களை விடுத்து ஆபுத்திரன் வாழ்ந்துவரும் சாவக நாடு செல்கிருள். சாவக நாட்டினைச் சிலர் ஜாவா என்றும் சிலர் சுமத் திரா என்றும் சொல்லுவர். இரண்டையும் சாவகம் என்பர் டாலமி. அந்தப் பழம்பெருந் தீவுகள் இணைந்தபகுதிக்கே சாவக நாடு என்று (இன்று போல அன்றும்) ஒரே பெயர் இருந்தது எனக் கொள்ளினும் தவறில்லை. எனினும் இன்று அங்கே ஆபுத்திரன் ஆண்டதற்கான சான்றுகளோ கதை களோ வேறு சிறப்புகளோ தெளிவாக இல்லையேனும் இது போன்ற கதைகள் சில நாட்டுப்புறங்களில் வழக்கத்தில் உள்ளன என்பர் ஆய்வாளர். ஆபுத்திரனுடன் நாகநாடு, நாகபுரம் என்பன யாவை என அறியாது தடுமாறுவோருக்கு இந்நாடும் நகரும் தெளிவு தருகின்றன. ஆபுத்திரன் நாடு எனினும் அதன் தலைநகர் நாகபுரம் எனவே கொள்ளப்பெறுகின்றது. நாகநாடு அல்லது சாவக நாடு என்பதில் ஒன்று அத்தீவுகளுக்குப் பொதுப் பெயராகவும் மற்றென்று நாகபுரத் தலைநகரை உடைய தீவுக்கு உரிய பெயராகவும் கொள்ளல் பொருந்தும். இந் நாகநாட்டொடு தொடர்பு கொண்ட காரணத்தி ேைலயே தமிழ்நாட்டுக் கடல் வாணிகத்தில் சிறந்த இடங் கள் நாகூர், நாகப்பட்டினம் என்ற பெயர்களைப்பெற்றன. நாகப்பட்டினத்தில் புத்தவிகாரம் இருந்ததும் வரலாற்று உண்மை. சாவகம் என்பது தமிழ் நூல்களில் கூறப்படும் 1. The Great twin epics. By Kanakasabai Pillai, page 8t 2. * 9 sy § 3.