பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 18 மொழிகளுள் ஒன்று (திவாகரம்) என்பதும், அம்மொழி வழங்கிய சுமத்திரா, ஜாவா உள்ளிட்ட தீவுகளின் தொகு தியே சாவக நாடு என்பதும் பல்கலைக் கழக அகராதி வழியே தெளியும் செய்திகள் ஆகும். எனவே இந்நாட் டின் தலைநகரில் வாழ்ந்த ஆபுத்திரனைக் கண்டு மணிமே கலை, அவனை மணிபல்லவம் வரப்பணித்துத் தான் பறந்து சென்று அத் தீவை அடைகிருள். ஆண்டு அவள் பீடிகை யைக் கண்டு, பழம் பிறப்புணர்ச்சியால் பல உண்மைகள் உணர்ந்து தன்வசமிழந்து நிற்கிருள். புண்ணியராசன் என்ற பெயர் கொண்ட ஆபுத்திான் ஆண்டுவர, அவனுக் குப் பழம்பிறப்பை உணர்த்த, தீவதிலகை அங்கே அவன் இறந்ததையும், அவனை விட்டுச் சென்ற மரக்கலச் செட்டி கள் திரும்பிவந்து உயிர்விட்டதையும் கூறி, அந்தப் பழம் பிறப்பு கொண்ட எலும்புகளையும் காட்டுகிருள். இதற் கிடையில் மகன் பிரிவால் மாழ்கிய கிள்ளிவளவன் இந்திர விழாவை மறக்க, புகார் கடலால் கொள்ளப்பெற்றது. தீவ திலகை அதையும், அறவனரும் மாதவியும் வஞ்சிக்குச் சென்றமையையும் கூறி மணிமேகலையையும் வஞ்சிக்குச் செல்லச் சொல்லுகிருள், அங்கும் வருவன பற்றிய சிலவற் றைச் சொல்லாது,'வஞ்சியள் அறவணன்பால் கேட்பை" எனக் கதை கேட்க நம்மை ஏங்க வைக்கிருர், பின் மணி மேகலை புண்ணியராசனுககு, 'அறம்எனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” –25/228-281 என அறம் உணர்த்த, அவனும் அவ்வறத்தை மேற்கொள் வேன் என உறுதி கூற, அவனிடமும் தீவதிலகையிடமும் விடைபெற்று விசும்பாருக வஞ்சிநகர் நோக்கிப் புறப்படு கிருள் மணிமேகலை. 1. Vol. Ill page 1392