பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 தாயினைக் காணல் கண்ணகி கோயில் கொண்ட இடம் வஞ்சியல்லவா! தன் உளம் உந்த வஞ்சியடைந்து, கண்ணகிமுன் சென்று, "அற்புக்கட னில்லாது நற்றவம் படராது கற்புக்கடன் பூண்டு நும்கடன் முடித்தது அருளல் வேண்டும்' –26||7-8 என்று கேட்டுக்கொள்கிருள். அதற்குக் கண்ணகிதேவி தனக்கு மதுராபுரித் தெய்வம் கூறிய முன்னை வினையெல் லாம் முற்றக் கூறியதோடு அமையாது, தனக்கு மேலும் பிறவி உண்டென்பதை உணர்த்துகிருள். சிலப்பதிகாரத் தைப் படித்த நமக்கு கண்ணகி தெய்வமானுள் என்ற உணர்வும் அவள் பிறவா நிலை பெற்றுள்ளாள் என்ற உணர்வுமே தோன்றுகின்றன. எனினும் மணிமேகலையே அவள் இன்னும் பிறக்கப்போகிருள் என்பதையும் அதற் குக் காரணம் அவள் கொண்ட சீற்றமே என்பதையும் விளக்குகிறது. கண்ணகி கணவனேடு சுவர்க்கம் புகுந் தாள் என்றே சிலம்பு கூறுகிறது. அச்சுவர்க்க வாழ்க்கை நிலையற்றதென்பதை இந்திரன் முன்னலேயே ஆபுத்திர ல்ை விளக்கிய சாத்தனர், அச்சுவர்க்கம் சென்ருர் திரும்ப வும் மண்ணில்பிறந்து புண்ணிய பாவ வினைகளைத் துய்த்த பிறகேதான் பிறவாப் பெருநெறி அடைவர் என்பதையும் கண்ணகி வாயிலாகவே காட்டுகிருர். சைவ சமயம் போன்ற பிறவற்றுள்ளும் இவ்வுண்மை ஏற்றுக் கொள்ளப் பெறுவதேயாம். சுவர்க்க வாழ்வு நிலைத்த ஒன்றன்று என் பதும் இறைநிலையுறும் பேரின்ப வாழ்வே பெருவாழ்வு என் பதும் சமய உண்மைகள். சமயம் உணர்தல் தாயை வணங்கி அவள் அறிவுரை ஏற்றபின், மணிமே கலை வஞ்சியில் வாழ்ந்த பல சமயத்தவர் கொள்கைகளை யும் கேட்டு அறிய விரும்புகிருள். அதற்குத் தன் இளமை