பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உரு ஏற்றதன்றென முதிர்ந்த தவசி வேடங் கொண்டு ஒவ்வொரு சமயத் தலைவரிடமும்சென்று பற்பல உண்மை களைக் கேட்டறிகிருள். அளவைவாதி, சைவவாதி, பிரம வாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்ட வாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி ஆகியோ ரைக் காண்கிருள். எனினும் சாத்தனர் ஐவகைச் சமயமும் அறிந்தாள் என்கிருர். இவற்றைப்பற்றிப் பின்னர்க் காண் போம். இச் சமயங்களுள் சில தற்போது நாட்டில் இல்லை; சில வேறு பெயர்களில் உள்ளன. அக்காலத்தில் சைவம், வைணவம், வைதிகம் என்ற மூன்றும் தனித்தனிச் சமயங்க ளாக இருந்தனவே அன்றி, மூன்றும் கூடிய கலவையாக இந்து சமயம் இல்லை என்பதும் தேற்றம். மணிமேகலை பிற சமயங்களையெல்லாம் பற்றி ஒன்றும் கூருது கடவுளே இல்லை என்னும் பூதவாதக் கொள்கையை மட்டும் கண் டிக்கிருள், சமயங்கள் பல அறிந்தபின் தன் பெளத்தமே மேலோங்கியதென உணர்ந்து, பின்னும் வஞ்சியில் தன் பாட்டகிைய மாசாத்துவானைக் காண்கிருள். ஈண்டு, அவன் வஞ்சிக்கு வந்த காரணத்தை உரைக்கு முகத்தான் கோவலனுக்கு ஒன்பதாம் தலைமுறையில் வாழ்ந்த கோவ லன் என்பான், வஞ்சி மன்னனுக்கு உற்றவகை இருந்த தோடு புத்தன் நல்லருளுக்கு இலக்காயின்ை என்பதை யும் சாத்தனர் காட்டுகிறர். பின் அவர் வழியே அறவன ரும் அன்னையாம் மாதவியும் காஞ்சி சென்றதைக் கேட்டு, அவரிடம் விடைபெற்று வான்வழியே காஞ்சி வந்தடை கிருள் மணிமேகலை. காஞ்சியில் அறச்செல்வி புகார், மதுரை, வஞ்சி மூன்றும் சிலம்பில் காட்டப்பெற மறைந்த புகாருக்கு ஈடாகப் புகழ்சேர் காஞ்சி மணி மேகலையால் காட்டப்பெறுகின்றது. காஞ்சி மன்னன், சோழமன்னனுக்கும் பீலிவளை என்பானுக்கும் பிறந்த இளந்திரையன் மரபினன் என்பர் ஆய்வாளர். சிலர் இளந் திரையனே என்பர். அவன், மணிமேகலை வரவை முன்னரே