பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 அறிந்து, அங்கே முன்னமேயே மணிபல்லவம் புத்த பீடிகை, கோமுகிப் பொய்கை அனைத்தையும் அமைத் திருந்தான். வந்தவளை வ ர .ே வ ற் று, அந்த மணி பல்லவத்தில் அவளைத் தங்க வைக்கிறன். அவளும் அங்கிருந்து அறமாற்றிச் சிறக்கிருள். மணிமேகலை தங்கிய அறச்சாலைக்கு மாதவியும் அறவண அடிகளும் வந்து சேர, வாய்வதாக என் மனப் பாட்டு அறம், என மணிமேகலை அவர்களை வணங்கித் தவத்திறம் பூண்டு, புத்த தருமத்தைக் கேட்டு .ெ ம ய் ப் .ெ பா ரு ள் அறிந்து கொள்ளத் தொடங்குகிருள். ஈண்டும் சாத்தனர் சமயக் கொள்கைகள் பலவற்றையும் காட்டிக் காட்டிச் சமய நுணுக்கங்களின் உண்மைகளை உணர்த்து கிருர். இவற்றை ஏற்ற மணிமேகலை, . "புத்த தன்ம சங்க என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கி சரணு கதியாய்ச் சரண் சென் றடைந்தாள்.'-30|3-5 உண்மையைத் தெரிந்து கொள்ள மேலும்மேலும் முயன்று அறவண அடிகள்பால் பலப் பல உணமைகளை உணர்ந்து, உள்ளொளி பெறுகிருள் மணிமேகலை. 'தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகெனப் பாவை கோன்றனள்"-30/263.264 என்று சாத்தனர் தம் நூலை முடிக்கிருர். கடைசியில் சில காதைகள் வழிச் சாத்தனர் தம் சமய உண்மைகளைப் பற்றியே அதிகம் கூறிப் பெளத்த சமயமே சிறந்தது எனக் காட்டுகிறர். சமயங்தளுக்கெனத் தனிப் பெருநூல்களோ வாதப் பிரதிவாதங்களோ இல்லாதிருந்த தமிழ் நாட்டில், இவ்வாறன சமய வாதங்களையும் போராட்டங்களையும் எழுப்பித் தம் சமயமே மெய்ச்சமயம் என வாதிக்கும் வகையினைத் தமிழ் நாட்டில் முதல் முதல் நாட்டியவர் சாத்தனரே யாவார்.