பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முடிவுரை இவ்வாறு சிறந்த இலக்கியமாக-சமயக் காழ்ப்பற்று விளக்கும் சிலம்பொடு ஒட்டி எழுந்த மணிமேகலை, நல்ல இலக்கியமாக விளங்குவதோடு, சமய நூலாகவும் மாறி விட்டமை தான், நான் முன்னே காட்டியபடி, இது அறிஞராலும் பொதுமக்களாலும் சிறந்து போற்றப் படாமைக்குக் காரணமாகும். சாத்தனர் இந் நூலின் வழியே தம் சமய உண்மையைக் காட்டியதோடன்றி விதியின் வலிமையை அ த னி னு ம் அதிகமாகக் காட்டி வற்புறுத்துகிருர் எந்த இடத்திலும் அவரவரர் செய்த நல்வினை தீவினை இரண்டுமே ஆட்சி செய்வதைக் காண லாம். நாமெலாம் தெய்வநிலை பெற்றவராக எண்ணப் பெறும் கண்ணகியையே விதிக்குள்ளாக்கி, மறுபடியும் பல பிறவி அவள் எடுத்தாகவேண்டும் எனக் காட்டுகிருர், மேலும் அப்பிறவியிலிருந்து வி டு த லை பெறுதற்கு ஆண் பிற ப் பே இன்றியமையாத தெனவும் அப்பிறப்பும் புத்தர் பரிநிர்வாண மடைந்த உத்தர மகத்தில் அமைய வேண்டுமெனவும் நம்பிக்கையை உண்டாக்க வைக்கிருர், இவையெல்லாம் அனைவருக்கும் ஏற்புடைக் கொள்கைகள் அல்லவானமையின் இலக்கியச் செறிவுடைய போதிலும் மணிமேகலை சிறக்கவில்லை எனலாம். சாத்தனர் தம் நூலின் வழி வெறும் மணிமேகலையின் கதையினையும் தம் சமய உண்மைகளையும் மட்டும் காட்டி இருப்பார் ஆயின், இவ்விலக்கியம் என்ருே வழக்கழிந்து மறைந்திருக்கும். அவர் இவற்றை மூலமாகக் கொண்டு அன்றைய தமிழ்நாட்டையும் அவற்றின் தலைநகர்களையும் அவை பெற்ற அமைப்பின் சிறப்பையும்அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும், சிறப்பாகப் பிறர் நெஞ்சு புகாத தமிழ்நாட்டுக்கே சிறப்பினைத் தரும் மகளிரின் கற்பின் நிலையையும், அக்காலச் சமுதாய நெறிகளையும் அரசியல் செம்மையையும் உணவளித்தலின் சிறப்பையும் மக்கள் வாழ்வுக்கும் உயிர் வாழ்வுக்கும் தேவையான பிற உண்மைத் தத்துவங்களையும் நூல் முழுதும் விளக்கிக்