பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொழிவு-உ- (30-1-1973) அரசும் சமூகமும் தலைப்பு வாழும் இலக்கியம் எதுவும் வெறும் வரலாற்றேடு நிற்பதில்லை. வெறும் கதையை மட்டும் சொல்லுவது இலக்கியமாகாது; அது ஒருவேளை ‘வரலாறு' என்ற தகுதியைப் பெறலாம். ஆனல் வரலாற்றுக் கிடையில் மக்கள் வாழ்வை மையமாக வைத்து, கற்பனை கலந்து என்றும் வாழும் உண்மைகளை அன்றைய சமுதாயத்திடை வைத்துக் காலமெலாம் வாழும் சமுதாயத்துக்கு எடுத் துரைப்பதே இலக்கியம். மணிமேகலை இந்த வகையில் வெறும் மணிமேகலையின் கதையை மட்டும் கூறி இருக்கு மாயின், அது வாழும் இலக்கியமாக அமைந்திருக்காது. மணிமேகலையொடு தொடர்புகொண்ட எத்தனையோ பாத்திரங்கள் எத்தனை எத்தனையோ வகைகளில் நமக்கு அறிமுகமாகின்றனர். எத்தனையோ நாடுகளைப்பற்றி நாம் அறிந்து கொள்ளுகிருேம். அவ்வந்நாட்டு மக்களையும் அவர்தம் வழக்க ஒழுக்கங்களையும் உணர்ந்து கொள்ளு கிருேம். அவற்றுள் கொள்ளவேண்டுவனவற்றையும் தள்ளவேண்டுவனவற்றையும் சாத்தனர் நன்கு பாகு படுத்திக் காட்டுகிருர். நாடுகளையும் நகர்களையும் பற்றிப் பேசும்போது சாத்தனர், அக்காலத்திய நகர, ஊர் அமைப்புகளையும் அவற்றின் சிறப்பியல்புகளையும் நன்கு காட்டுகிருர். எனவே, மணிமேகலையை ஒருமுறை படித் தால் கி. பி. இரண்டாம் நூற்றண்டில் இருந்த தமிழ்நாட்டு நிலையினையும் அதைெடு தொடர்புகொண்ட பிற நாடு களின் அமைப்பு, அரசியல் முதலியவற்றையும் உணர்ந்து