பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கின்றன. இவற்றுள் சிலவற்றைக் கதைவழியே அறிந்து கொள்வதோடு சில நகரங்களிலும் நாடுகளிலும் தீவு களிலும் நாமும் பாத்திரங்களோடு ஒன்றி உலவிவரும் வாய்ப்பினைப் பெறுகிருேம். அவ்வாறு உலவும்போது அவ்வந் நாட்டு நிலை, வாழ்க்கை முறை, வரலாற்று நெறி ஆகியவை பற்றி நன்கு உணர்ந்து கொள்ளுகிருேம், இந்த நாடுகளிலும் நகரங்களிலும் நம்மை ஈர்த்துச் சென்று சாத்தனர் அனைத்தையும் காட்ட நினைந்தாலும் நாம் முற்றும் உணர்ந்து கொள்ள முடியவில்லை; மற்றும் அவர் காட்டும் எல்லா ஊர்களுக்கும் நம்மால் செல்லவும் முடிவதில்லை. எனவே ஒரு சிலவற்றை மட்டும் ஈண்டுக் காண முயலலாம். N புகார் சிலம்பில் புகார், மதுரை, வஞ்சி, என்ற மூன்று பெரு நகர்கள் நன்கு காட்டப்பெறுவன போன்றே, ஈண்டும் புகார், வஞ்சி, காஞ்சி என்ற மூன்று பெருநகர்களும் காட்டப்பெறுகின்றன. மதுரைக்கும் நம் கதைக்கும் பெருந்தொடர்பு இல்லையாயினும் நம் கதையில் முக்கிய மாக வரும் அமுதசுரபியை ஆபுத்திரனுக்கு அளித்த பெருமை மதுரைக்கே உண்டு. ஆண்டிருந்த சிந்தா தேவியின் கோயிலிலேதான் அத்தெய்வம் தர, ஆபுத்திரன் அமுதசுரபியைப் பெற்றன் என அறிகிருேம். அம். மதுரையைச் சாத்தனர் தக்கண மதுரை' என்கிருர் , மணிமேகலையின் கதையின் பெரும்பகுதி புகார் நக ரிலும் அடுத்த ஒரு பகுதி மணிபல்லவத்திலும் நடை பெறுகின்றது. சாவக நாட்டு நாக புரம், வஞ்சி, காஞ்சி ஆகியவற்றிலும் சிற்சில பகுதிகள் நடைபெறுகின்றன. நாமும் மணிமேகலையுடனே அவ்விடங்களுக்குச் செல் லும்போது அவை பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு உண் டாகின்றது. முதலாவதாகப் புகார் பற்றி மணிமேகலை 1. 131105