பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 காட்டுவ தறியலாம். இப்புகார் நகர்பற்றி ಅprTG நமக்குச் சிலப்பதிகாரம் நன்கு காட்டுகிறது. எனினும் சிற்சிலவற்றைச் சாத்தனர் நமக்குப் புதிதாகக் காட்டு கிரு.ர். மணிமேகலையின் பதிகம் பாடியவர் யார் என்பது புரியவில்லை. பதிகத்து இறுதியில் சாத்தனர், இளங்கோ வடிகள் இருவரையும் படர்க்கையில் குறிப்பதால் முன்மு மவர் ஒருவர்தாம் இதைப் பாடி இருக்கவேண்டும் என அறிகிருேம். அவர் புகார் பற்றிக் கூறும்போது சம்பு' என்பானையும் காவிரியையும் இணைக்கிருர். பரந்த பாரத நாடு சம்புத் தீவு என அழைக்கப் பெற்றமையும் 'சம்பு என்ற நாவல் மரக் காடுகள் நிறைந்து இருந்தமை யின் இப்பெயர் பெற்றதென்பதையும் புராண மரபு வழியே அறிகிருேம். நாவலோங்கிய மாபெருந் தீவு' என்றே சாத்தனர் (2 12) குறிக்கின்றர். இச் சம்புத் தீவின் காவல் தெய்வமாகச் சம்பு என்பாள் கொள்ளப் பெறுகிருள். அவள் வடக்கிருந்து, மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டுத் தெற்கே வந்தவள் என்கிறது பதிகம். ஆயினும் அத்துயர் எத்தகையது என அறிய முடியவில்லை. மேலும் இத்தகைய வரலாறு மணிமேகலை நூலிலும் வேறு இடங்களிலும் காணக் கிடைக்கவில்லை. ஆல்ை, 'வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த சம்பாதி இருந்த சம்பாதி வனமும் –3153 - 54 என்ற அடிகள் நூலில் உள்ளன. அந்த எல்லையில் சம்பாதி என்ற புள்ளரசன் இருந்து, அங்கே கோயில் கொண்டிருந்த இறைவனை வழிபட்டமை பின்வந்த சம்பந்தர் பாடலாலும் அறிகிருேம். 'தள்ளாத சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளார்ைக் கரையனிடம் புள்ளிருக்கு வேளுரே' - சம். புள்ளிரு. 1