பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இலவந்திகை என்பதை இலந்தி வாளிது.ழ் சோலை என்பர். அஃது அரசனும் உரிமையும் ஆடும் காவற்சோலை என்பர் அடியார்க்கு நல்லார். (சிலம்பு. உரை 10|30-31) எனவே, அந்நகரில் சோலைகளும் வாவிகளும் அரசர்களுக்கென வும் மற்றய பொதுமக்களுக்கெனவும் தனித்தனியாக இருந்தன எனக் காண்கிருேம். பளிக்கறை (கண்ணுடியின் இயல்பு) உவவனத்தினிடையே பளிக்கறை உள்ளமை அறிகிருேம். அஃது கண்ணுடி மாளிகை போலும், இன்றும் பெருநகரங்களில் அத்தகைய மாளிகைகள் காட்சிப் பொருள்கள் வரிசையில் காட்டப் பெறுவனவாக உள்ளமை அறிவோம். சாத்தனர் அக்கண்ணுடி, ஒலியை விடாது ஒளியை மட்டும் புறத்துவிடும் தன்மையை, "விளிப்பு அறைபோகாது மெய்புறத் திடுஉம் பளிக்கறை மண்டபம்" –3/64-65 என்பர். எனவே மக்கள் பொழுதுபோக்குக்காகவும் மலர் முதலியன கொய்வதற்காகவும் விளையாடுவதற்காகவும் பிற பொது நலங்களுக்குப் பயன்படுவதற்காகவும் பூங்புகாரின் இடையிடையே பல சோலைகள் இருந்தன எனக் காண்கின்ருேம். வண்ணமும் சுண்ணமும் இத்தகைய இயற்கை நலம் தோய்ந்த நகரில் மக்களின் கைவண்ணத்தான் செயற்கை நலன்கொண்டு சிறக்கும் காட்சிகளையும் சாத்தனர் பலவிடங்களில் காட் டிச் செல்லுகின்றர். (நான் இத்தகைய பல்வேறு காட்சிகள் பற்றிய விளக்கங்களுள் ஒன்றிரண்டனையே காட்டிச் செல்லுகின்றேன்). 'வம்ப மாக்கள் கம்பலை மூதூர் சுடுமண் ளுேங்கிய நெடுநிலை மனைதொறும்