பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 மையறு படிவத்து வானவர் முதலா எண்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்." –3/126-131 என்று சாத்தனர் செங்கற்களால் கட்டப்பெற்ற பல அடுக்குகளிலைாகிய மாளிகைகளையும் அச்சுவர்களில் நன்கு அரைக்கப்பெற்ற வெள்ளிய சுண்ணும்புச் சுதை கொண்டு விளக்கப்பெறும் கண் கவர் ஒவியங்களையும் நமக்குக் காட்டுகி ருர். சாத்தனர் புகார் நகரினையே ஒரு பெண்ணுக உருவகம் செய்கின்ருர், ஒரு பெண்ணுக்கு அமையவேண்டிய எல்லாச் சிறப்புகளையும் எண்ணிச் சாத்தனர், புகார் என்னும் பூங்கொடியினை, "புலவரை இறந்த பூகாரெனும் பூங்கொடி பன்மலர் சிறந்த நன்னீர் அகழி புள் ஒளிச் சிறந்த தெள்ளரிச் சிலம்படி ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை வாயில் மருங்கியன்ற வான்பனைத் தோளி தருகிலை, வச்சிரம் என இரு கோட்டம் எதிரெதி ரோங்கிய கதிரிள வனமுலை ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி ஊழி எண்ணி நீடுகின் ருேங்கிய ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி குணதிசை மருங்கில் நாள்முதல் மதியமும் குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டோடு பொன்தோ டாக எள்ளரு திருமுகம் பொலியப் பெய்தலும்' –5/109–122 எனக்காட்டி, நல்ல பெண்ணுக்குரிய அழகினையும் அணிகளையும் "பாதாதி கேச வர்ணனையாக விளக்கிக் காட்டுகிருர், மேலும் சுவர்களின் அமைப்பினையும் அவற்ருலாகிய வாயில்களையும்