பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 தார்க்கு நன்றியுடையனாக வாழ் என்கின் ருர். கேட்பன போலவும் கிளக்குந போலவும் அஃறிணை மருங்கில் பேச்சும் செயலும் நிகழ்வதை இலக்கணமாகக் கொள்ளு கின்றனர். இந்த அடிப்படையில் அன்றிச் சமயநெறி வழி யிலோ அன்றி வேறு கருதியோ சாத்தனர் இக்கந்திற் பாவைகளைப் பேச வைத்துக் கதையில் பல திருப்பங்களை உண்டாக்குவதோடு பல உண்மைகளையும் உணர்த்து கிருர், விண்வழிப் பறத்தல் போன்று இந்தக் கந்திற் பாவை காட்டுவன மனிதநிலைக்கு அப்பாற்பட்ட செயல் களெனக் கொள்ளவேண்டியதே என எண்ணத் தோன் றும். எப்படியாயினும் சித்திர வேலைப்பாடமைந்த கம்பங் களில் உள்ள உருவங்கள் பேசுவதல்ை பல நிகழ்ச்சிகள் நன்ருமாறு காண்கின் ருேம். மணிமேகலைக்கு வருவதை முற்றும் உரைப்பது கந்திற் பாவையே என அறிகிருேம். சுதமதியோடு பேசுவதும் உதயகுமரனைத் தடுப்பதும் மணி மேகலையை அவன் உடலருகில் செல்லாது விலக்குவதும் காஞ்சனனுக்கு அறிவுறுத்துவதும் மருதிக்குக் கற்பின் - சிறப்பை விளக்குவதும் பிற இன்றியமையாச் செயல்களும் வஞ்சியில் கண்ணகி தன் வரலாற்றையும் வரும் நிகழ்ச்சி களையும் விளக்குவதும் பாவைகள் பேசும் செயல்களாக அமையினும் அவற்றைத் தெய்வ வாக்காகவே கொள்ளும் நிலையில்தான் நாம் நிற்கிருேம். எனவே, கோட்டம் அன்றி மண்டபம் அமைப்பில் இச்சித்திரப்பாடும் சிலை உருவும் அமைந்த தூண்களின் அமைப்பு சிறந்தனவாக மணி மேகலையிற் போற்றப்பெறுகின்ற தறிகிருேம். சிறைக் கோட்டமும் அறக் கோட்டமும் நகரங்களில் இற்றை நாட்களைப் போன்றே அன்றும் சிறைக் கோட்டங்களும் அறக் கோட்டங்களும் இருந்தன என்று காண்கிருேம். மணிமேகலையின் வாய்மொழியால் சோழ மன்னன் ஒரு சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்கினமை அறிகிருேம். சிறைச்சாலையோடு புழுக்கறையில் அடைப்பது போன்ற தண்டனைகளும் அக்காலத்தில் இருந்தமை உணர்கிருேம். (23:58-63).