பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மன்னரும் மக்களும் மணிபல்லவம் பற்றியும் அதில் அமைந்த புத்த பீடிகை, கோமுகிப் பொய்கை முதலியவை பற்றியும் நாக நாடு, சாவக நாடுகள் பற்றியும் ஒரளவு முன்னமே கண்டுள்ளோம். இனி, மணிமேகலையுடனே சாவக நாட்டின் ஒரு பகுதியான நாகநாட்டின் தலைநகராகிய நாக புரம் நாடிச் செல்வோம். ஆனல் சாத்தனர் அவ்வூரைப் பற்றி நமக்கு அதிகம் காட்டவில்லை. ஆயினும் மன்னன் அறத்தாறு நலம்புரக்கும் மன்னனதலின் அவன் நாடு எப்படி இருந்தது எனக் காட்டுகின்றனர். முன் உதய குமரன் வெட்டுண்ட போதும் ஈண்டும் நாட்டு மன்னர் நிலையையும் மக்கள் நிலையையும் சாத்தனர் காட்டி, "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்ற உண்மை யைத் தெளிய வைக்கிருர். புண்ணியராசன் ஆளும் அந்த நாக நாடும் நாக புரமும் நல்லவன் ஆள்கின்ற காரணத் தாலே, "ஈங்கிவன் பிறந்த அந்நாள் தொட்டும் ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது மண்ணும் மரனும் வளம்பல தருஉம் உள்கின் றுருக்கும் நோய்உயிர்க் கில்லை" -24/171-174 என்று நல்லவர் வாழின் நாட்டில் மழைபெய்ய வளஞ் சுரக்கு மென்பதையும் எவ்வுயிருக்கும் நோயில்லா நல் வாழ்வு கிடைக்கும் என்பதையும் வற்புறுத்துகிருர். "மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும் காவலற் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்' -புறம் 35/27-29 என்ற புறநானூற்று அடியை நன்கு அறிந்து போற்றுகிருர் சாத்தனர். வேலும் கோலும் அரசனுடைய அருள் கண் களென அமையவேண்டும் என்பதை மேலே முனிவர்கள் வாக்கிலே (22/15) காட்டியுள்ளார்.