பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பல பொருள்களைப் பற்றி ஆய்வு நட்த்தி, நாட்டுக்கு நலம் புரியும் வகையில் அன்றைய நகரமைப்பும் நாட்டு வாழ் வும் அமைந்தன எனக் கொள்ளல் பொருந்துவதாகும். இவர்களையன்றி நாடு காவல் புரியும் மதில் காக்கும் மறவ ரும் அப்புறஞ்சேரியில் தங்குவர் என்ற உண்மையை, 'வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போற்புறஞ் சுற்றிய புறங்குடி' –28/3-4 என்று சாத்தனரே சொல்லுகிருர். எனவே நகர் அமைப் பில் அகழியையும் புறமதிலையும் ஒட்டி அறவோர் ஒரு புறம் இருக்க நாடு காக்கும் நற்படையும் காவல்புரியும் எனக் காண்கிருேம். இளங்கோவடிகளும் இந்த வகை யிலேதான் வஞ்சியின் குணவாயிற்கோட்டத்து அரசு துறந்து அறநெறி போற்றி இருந்தார் போலும். வஞ்சிக் காண்டத்தில் இளங்கோவடிகள் சேரன் தலை நகரை விரிவாகக் காட்டவில்லை என்ற குறையைச் சாத்த னர் போக்கிவிடுகிருர். சேரன் மலை வளத்தையும் நாட்டு மக்களின் தன்மையையும் ஒரளவு இளங்கோவடிகள் காட்டியுள்ளார். சாத்தனர் வஞ்சியில் இருந்த பல்வேறு தெருக்களையும் அங்கே நடைபெற்ற பலவகைத் தொழில் களையும் சுட்டிக் காட்டுகிருர், அதற்குமுன் நகர் புகு எல் லையில் இருந்த அகழியின் சிறப்பைச் சித்திரிக்கிருர், பல் வேறு வண்ண நீர்களும் மலர்களும் பரந்துள்ளமையின் இந்திர தனுவென அது இருந்தமை காட்டப்பெறுகிறது. அகழிகை அடுத்து மதில், மதிலகவாயில் - பின் அகன்ற தெருக்கள் ஒன்றன்பின் ஒன்ருக நம்முன் தெரிகின்றன அத்தெருக்களைக் காட்டும்போது முதலாவதாக, இன்றிய மையாத் தொழில் வளம் சிறப்பதைக் காட்டுகிருர்; பின் பாணர் கூத்தர் முதலியோர் வாழ் தெருக்களைக் காட்டு கிருர்; அடுத்து, கடைத்தெருக்கள் - பின் அரசர் பணி யாளரின் தெருக்கள் இப்படி வஞ்சிநகரின் முழுச் சிறப் பையும் சில அடிகளில் விளக்கிய சாத்தனர் இறுதியாக,