பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 சொற்பொழிவு-க-இ-1-1972) சாததருைம நூலும் முன்னுரை உலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின் றன. அவற்றுள் மனிதன் ஆறறிவு பெற்றவகை, அவ்வுயிர் களுக்கெல்லாம் மேலானவகை இருந்து வருகிறன். நல்ல தன் நலனும் தீயதன் தீமையும் பகுத்துணரும் பண்பாட்டு நெறியில் வாழும் மனிதன் தன் அறிவின் திறத்தால் பலப் பல உண்மைகளை உணர்கின்றன். உளத்தாலும் உதட் டாலும் பிறவற்றேடு - பிறரோடு உறவாடுகின்றன். அவ் வாறு மற்றவர்களோடு உறவாட இன்றியமையாது வேண் டப்படுவது மொழியாகும். . உலகில் மொழி தோன்றிய நாள் உயரிய நாளாகும். மனிதன் விலங்கென வாழ்ந்த நிலையை மாற்றி, உள்ளக் கருத்தை உதட்டால் பரிமாறிக்கொள்ள உதவிய அம் மொழியே அவனைச் சமுதாயமாக்கி வாழவைத்து, மனிதப் பண்புள்ளவனாகவும் ஆக்கிற்று. எனவே, அம்மொழி வழி யேதான் உலகச் சான்றண்மையும் பண்பாடும் வாழ்கின் றன எனலாம். ஆம்! அம்மொழிகள் பல்வேறுவகையாக உலகில் பரவி இருப்பினும் அவற்றின் அடிப்படையெல் லாம் ஒன்றேதான்; கருத்துப் பரிமாற்றத்தோடு கண்டதை உணர்த்தல் என்பதேயாம். இவ்வாறு உணர்த்தத் தலைப் பட்ட மனிதன், பல இயல்புகளை ஆராய்ந்து, உற்று னர்ந்து தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'என்ற உணர்வில் இலக்கியங்களை ஆக்கினன். மொழி தோன்றி