பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 "மறையோர் அருந்தொழில் குறையா மறுகும் அரசியல் மறுகும் அமைச்சியல் மறுகும் மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் புதுக்கோள் யானையும் பொன்தார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின் பெறு வீதியும்" –28/56–60 எனத் தெருதோறும் நம்மை அழைத்துச் செல்கிறர். இவை யன்றிப் பொழுதுபோக்குக்காக அமைந்த பல்வேறி டங்களை, "சேணுேங் கருவி தாழ்ந்த செய்குன்றமும் வேணவா மிகுக்கும் விரைமலர்க் காவும் விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து கண்ணுதற் கொத்த கன்னி ரிடங்களும் சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் கோலம் குயின்ற கொள்கை யிடங்களும் கண்டு மகிழ்வுற்று' –28/61-67 மணிமேகலையுடனே நம்மையும் அழைத்துச் சென்று நமக் கும் காட்டி மகிழ்ச்சியூட்டுகிருர். இளங்கோவடிகள் சொல் லாத மற்ருென்றையும் சாத்தனர் இங்கே நமக்குக் காட்டு கிருர். கண்ணகிக்குக் கோயிலெடுத்த செங்குட்டுவன் 'ஆனே றுயர்த்தோன் அருளிற் ருேற்றியவன்"என இளங் கோவடிகள் கூறி, அங்கே ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்த திருமால் வழிபாடு உண்டென்பதையும் குறிக் கிருர், தாம் சைன சமயத்தைச் சார்ந்திருந்த போதிலும் அச்சமயம் அந்நாட்டில் பரவியுள்ளமை பற்றி ஒரு குறிப் பும் காட்டவில்லை அடிகள். ஆனல் சமயத்துக்காகவே தம் காப்பியத்தைப் பாடினரோ என எண்ணத்தக்க வகையில் உள்ள சாத்தனர் வஞ்சியில் பல பெளத்த விகாரங்கள் உண்மையை மட்டும் கூருது, கோவலனுக்கு ஒன்பதாவது தலைமுறையில்-சுமார் அக்காலத்துக்கு 200 அல்லது 250 ஆண்டுகளுக்கு முன்பே அங்கே பெளத்த சங்கம் இருந்த தாகவும் அந்நெறி பற்றிக் கோவலன் முன்னேனுகிய ஒன்பதாந் தலைமுறைக் கோவலன் அங்கே வந்தான்