பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. அவள் வந்தால் தங்கத்தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்: தான் என அறிகிருேம். இங்கும் நாட்டில் பஞ்சம் உண் ட்ானமைக்குக் காரணம் தன் கொடுங்கோல்தான என்று எண்ணுமாறு, செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ கலத்தகை நல்லாய் நன்ன டெல்லாம் அலத்தற் காலை ஆகியது அறியேன்" -28/188-191 என்று அரசன் வாக்காகவே காட்டுகிறர். இத்தகைய காஞ்சியில் அஞ்சுதற் கஞ்சி அறம் போற்றி வாழ்ந்த அரசல்ை அமைக்கப் பெற்ற அந்த மணி பல்லவத் திட்டில் மணிமேகலை அறவண அடிகளிடம் மாதவியுடன் அறம் கேட்டு, முத்தரும நெறியாம் புத்த நெறி போற்றி வாழ்ந்து வந்தாள். இந்த மணிபல்லவம் இன்றும் பல்லவமேடு என்ற பெயரால் வழங்குகின்றது. இதைச் சிலர் பல்லவர் ஆட்சி செய்த மேடு எனக் குறிப் பினும் மணிபல்லவமாகிய மேடு எனக் கொள்வதே சாலப் பொருந்துவதாகும். தீவகம் போன்ற காவகம்' எனச் சாத் தனர் கூறியபடியே இன்றும் இம் மணிபல்லவமாகிய பல்லவமேடு தீவகமென விளங்குகின்றது. மக்களும் நாடும் இவ்வாறு பல்வேறு வகையில் நம் நாட்டின் நிலப்பரப் பையும் பிற நிலங்களின் அமைதிகளையும் சாத்தனர் அந் நாடுகளையும் நகரங்களையும் முன்னிறுத்தி ஆண் டாண்டே வாழ்வார் வாழ்க்கை நெறி காட்டி, வழுக்கு நெறி சுட்டி, தக்க இன்ன, தகாதன இன்ன என எடுத்தி யம்பி, அன்று வாழ்ந்தார் வழியே நாம் என்றும் வாழ வழி வகுத்துள்ளார். இனி இத் தலைப்பின் அடிப்படையில் சில உண்மைகளை இன்று காணலாம் எனக் கருதுகிறேன். இந்த அடிப்படையிலேயே மேலும் ஈண்டுக் காணுத சில நாடுகளையும் தீவுகளையும் காணலாம் எனக் கருதுகிறேன்