பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 யங்கள் தோன்றிய நிலையினையும் நம்மால் உணர முடிகின் றதன்ருே! மகளிர் வாழ்வில் புரட்சி பெண்களை வெறுத்து, அவரொடு கூடிவாழும் வாழ் வையே கண்டு ஒடும் பெளத்த நெறியை ஒரு பெண்ணைக் கொண்டே வளர்த்த பெருமை சாத்தனருக்கு உண்டு, புத் தர் தம் கண்ணனைய மனைவியை விட்டுவந்து, பற்றே அனைத்துக்கும் காரணம் என்ருர், ஆல்ை சாத்தனரோ அதே பெண் இனத்தில் பிறந்த-அழகே உருவான மணி மேகலையை முன்னிறுத்தி அப்புத்த சமயத்தை வளர்த்து வாழவைத்தா ரல்லரோ! அசோகர் தம் காலத்திலே சில பெண்களை- அவர் மக்களுள் சிலரையே-சமயம் பரப்ப இலங்கை வரையில் அனுப்பினர் எனக் காண்கிருேம். ஒரு சிலர் பிக்குணிக் கோலத்தோடு சமயத் தொண்டு ஆற்றிய தையும் உணர்கின்ருேம். எனினும் இப்படி ஒர் இளம் பெண்-காமனும் மருளும் அழகெல்லாம் ஒருங்கே திரண்ட காரிகை-தன் கையில் அமுதசுரபி ஏந்தி, ஊர் தொறும் உழன்று உதவி, தனியளாய்ச் சமயம் பரப்பிய புரட்சி நிலையைப் புத்தர் தோன்றிய அவர் நாட்டிலேயும் காண இயலாது, மகளிர் நிலை அக்காலத்தில் நாட்டில் இருந்த சமயத்தொடு பெண்டிரைத் தொடர்பு படுத்திய வகையினையும் சாத்தனர் சுட்டாமல் இல்லை. இளையவளாகியவளும் பெண்ணுக உள்ளவளுமாகிய மணிமேகலைக்குச் சமய உண்மையை அவ்வச் சமயத்தோர் கூற மாட்டார்கள் என்பதை இவர் கட்டிக் காட்டுகிறர். பெளத்த சமயமட்டுமன்றிச் சங்க காலத்துக்குப்பின் சமயநெறிகள் அனைத்திலும் பெண்கள் தாழ்த்தியே பேசப் பெறுகின்றனர். பெண்களுக்கு வீடாகிய மோட்சம் கிடையாதென்றும் அவர்கள் ஆடவ ராகப் பிறந்தே அந்தப் பெருநெறி பெறவேண்டும் என்றும் அவர்கள் நம்பினர். சாத்தனரே இவ்வுண்மையை