பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 இரண்டிடங்களில் உணர்த்துகிறர். மணிமேகலை இறுதி யில் இறைநிலையுற்று அருளறம் புரிந்து அண்ணலின் அருளுக்கு இலக்காகும்போது ஆண் பிறவியே பெறப் போகிருள் என்ற உண்மையை அவள் கடைசிப் பிறப்புக் களைப் பற்றி அறவண அடிகள் வாயிலாக, "உத்தர மகதத்து உறுபிறப் பெல்லாம் ஆண் பிறப் பர்கி அருளறம் ஒழியாய் மாண்பொடு தோன்றி மயக்கங் களைந்து பிறர்க்கற மருளும் பெரியோன் தனக்குத் தலைச்சா வகளுய் சார்பறுத் துய்தி' – 21|176-179 எனக் காட்டுகிருர். மேலும் வஞ்சிமா நகருள் மணிமேகலை சமயக் கணக்கர் தம் திறம் கேட்க விரும்பிய காலை, அவள் இளையவளாகவும் பெண்ணுகவும் இருப்பதால் அவளுக்கு அச்சமயத் தலைவர்கள் சமய உண்மைகளை உரைக்க மாட்டார்கள் என்றும், எனவே வேற்று உருக்கொள்க எனவும் தெய்வமாகிய கண்ணகியே கூற, இவள் ‘மாதவன் வடிவாகிய ஆண் உருக்கொண்டு சென்ருள் எனச் சாத்தனரே காட்டுவர். 'இளையள் வளையோள் என்றுனக்கு யாவரும் விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்கென மையறு சிறப்பின் தெய்வதம் தந்த மந்திரம் ஒதிஒர் மாதவன் வடிவாய்' –26/68-71 மணிமேகலை சென்று சமயநெறிகள் பற்றி அறிந்தாள் எனக் காண்கிருேம். எனவே, அவர்காலத்தில் மகளிர் பெற முடியாததாகக் கருதிய சமய ஞானத்தை - சமயம் அறிந்து கொள்ளும் திறனை, அவரே மறுக்கும் வகையில் புரட்சி செய்து மணிமேகலை வழியிலேயே புத்த தரு மத்தை வளர்க்கத் துணிந்தமை போற்றக்கூடிய ஒன்றே Čl_jff LO,