பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெண்வழிப் புரட்சி மேலும் அக்காலத்தில் மகளிரின் இல்லிகவா நிலையில் இருந்தமையைச் சில விடங்களில் காட்டும் ஆசிரியர் மணிமேகலையை - இளமையிலேயே துறவியாகக் காட்டு வதோடு அவளை நாடும் நகரும் ஊரும் உலகமும் தனி யாகச் சுற்றவைத்துச் சமயம் வளர்க்கப் பயன்படுத்து கிருர். மேலே காட்டியபடி அவள் வஞ்சியுள் சென்று கண்ணகியைக் கண்டபோது இளையளாகவே இருந்தமை எண்ணத் தக்கது. ஆடவர் காம வயப்படுவர் என்பதைப் பலவிடங்கள் பல துறவிகள் - பல புலவர்கள் - பல நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனல் அந்நெறியை மறுக்கும் புலவர் அனைவரும் ஆடவர்களாகவே உண்மையைக் காண் கிருேம். அவர்தம் நூல்களிலும் ஆடவர்களாகிய முனிவர் முதலியோரையே பாத்திரங்களாகப் படைத்து, அக்காம இன்பத்தை முனியும் வகையில் காவியம் செய்துள்ளமை அறிவோம். ஆனல் சாத்தனர் பெண் இன்பத்தை ஒரு பெண்ணைக் கொண்டே துறக்க வைக்க முயலும் சாதனை யில் சிறந்த பெரும் புரட்சியல்லவா செய்துள்ளார்! தன்னையே நாடிவந்த உதயகுமரனை முன்னிறுத்தி, நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டிப் பெண் இன்பத்தை வெறுக்கும் வகையில் அவன் உள்ளத்தைத் தெருட்ட நினைத்து மணிமேகலை கூறிய சொற்கள் ஈண்டு எண்ணத் தக்கன வன்றே! தன் துறவுக்குக் காரணம் யாதெனக் கேட்ட அரசகுமாரனுக்கு மணிமேகலை, 'பிறத்தலும் மூத்தலும் பிணிபட் டிரங்கலும் இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்' –19/136-139 என் று கூறுகிருள். பின் ஒருமுறை அவன் அவளை நாடி வந்தபோது, காயசண்டிகை வடிவிலிருந்த மணிமேகலை