பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 எத்தனையோ ஆயிரமாயிர மாண்டுகள் கழித்தே செம்மை சால் இலக்கியங்கள் தோன்றியிருக்கக் கூடுமாயினும் அம் மொழிவழித் தோன்றிய இலக்கியங்களே அவனுடைய சென்ற காலத்தின் அருமையினையும் நிகழ்காலத்தின் சிறப் பினையும் வருங்காலப் பழுதிலாத் திறனையும் பின்னிப் பிணைக்கும் பெரும்பீரிலங்களாக அமைகின்றன. அத் தகைய இலக்கியங்களே நாடுதொறும் வாழும் மனித சமு தாயத்தின் வாழ்வையும் வளத்தையும் என்றும் உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. உலகில் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற செம்மைசான்ற மொழிகள் அனைத்திலும் நல்ல இலக்கியங்கள் உருவாகி யுள்ளன. நம் தமிழ் மொழியிலும் அத்தகைய இலக்கியங் கள் எண்ணற்றன. தமிழ்மொழி காலத்தால் மிகப் பழை மையான ஒன்று என்பது மட்டுமன்றி, இது செம்மை சான்ற உயர்தனிச் செம்மொழியாகவும் அமைகின்றமை யின், இதன் இலக்கியங்களும் தனித்தன்மை வாய்ந்தன வாகத் தமிழ்ச் சமுதாய வாழ்வை உலகுக்குக் காட்டிக் கொண்டே உயர்ந்து சிறந்து நிற்கின்றன. எத்தனையோ தமிழ் இலக்கியங்கள் மறைய, இன்று வாழும் ஒரு சில இலக்கியங்கள் நம் தமிழ்ச் சமுதாய அன்ருட வாழ்வினை எவ்வெவ்வகையில் விளக்கிக்காட்ட முடியுமோ அந்ததந்த வகையில் காட்டித் தமிழர் பண்பாட்டையும் பிற இயல்பு களையும் வையத்தில் வாழவைக்கின்றன. இலக்கியம் என்பது என்ன? இலக்கியம் என்பது என்ன? அது மனிதள் தன் உள் ளத் தளத்தில் தோன்றும் வெறும் கருத்துக் குவியல் மட்டு மன்று. மேலைநாட்டு அறிஞர் பலர் இவ்விலக்கியத்தை வாழ்வொடு இணைத்துக் காட்டுவர். இலக்கியம் வாழ்வின் மறுபதிப்பு-வாழ்வினை விளக்கிக் காட்டும் ஒளிவிளக்குகண்ணுடி என்றெல்லாம் விளக்கம் காட்டுகின்றனர். ஒரு காலத்தில் வாழும் சமுதாய வாழ்வினை, அச் சமுதாயத் துக்கு இடையில் தோன்றிய இலக்கியங்களே நன்கு படம் {