பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 'தெய்வந் தொழாள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேருய் 22/59-61 என்ற பொருளுரை பொதிந்த குறளையே சான்ருகக் காட்டி, அவள் விழாக்கோள் விரும்பிக் கடவுள் பேணலே' காரணம் என்று கூறியதைக் காட்டி, சாத்தனர் கற்பு நெறியை விளக்குவதோடு, அந்நெறியையும் உலக வாழ்வையும் போற்றிய வள்ளுவரையும் பொய்யில் புலவன்’ எனப் பாராட்டுகிறர். இவ்வாறு கற்பு நெறியில் பெரும் புரட்சியை இதுவரையில் சாத்தனுரை யன்றி வேறு யாரும் எம்மொழியிலும் செய்திலர். சாதிப் புரட்சி சங்க காலத்தில் எத்தனையோ தொழில்களும் அதன் வழியே பிரிவுகளும் இருந்தன. பிறப்பொவ்வா, செய் தொழில் வேற்றுமையான்' என்ற வள்ளுவர் வாய்மொழிக் கேற்ப மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆயினும் வைதிக சமயத் தவராகிய வடவாரியர் கடைச் சங்க காலத்துக்குச் சற்று முன்னர்த் தமிழ்நாட்டில் புகுந்து தம் வருணப் பிரிவைப் புகுத்திட நினைத்தனர். சங்க காலத்தில் அப் பிரிவு அதிக மாகக் கால்கொள்ளவில்லை யாயினும், அதை ஒட்டி அது வளர்ந்துவிட்டதைக் காண்கிருேம். சிலப்பதிகாரத்தி லேயே வைதிக சமயச் சடங்குகளும், மாடலன் போன்ருர் தம் சொல் போற்றலும் இடம்பெறக் காண் கிருேம். அவர் தம் வேத நெறியும் வேள்வி நெறியும் நாட்டில் வள்ர்ந் திருக்க வேண்டும். அதனல்தான் தமிழறம் போற்றிய வள்ளுவர், 'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணுமை நன்று' குறள் 259 என வற்புறுத்தினர். வைதிகத்தைச் சாடுவதற்கென்றே தம் இலக்கியத்தை எழுதிய சாத்தனர் அவ்வேள்வியையும் அதைச் செய்யும் மரபினையும் மாக்களையும் வன்மையாகக் கண்டிக்கிரு.ர்.