பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. இயற்றியும் குலமுதல்வராகியும் சிறந்த தன்மையை ஆபுத்திரன் வழியே சாத்தனர் விளக்குகிருர். விளக்கி, அத்தகைய வேள்வி ஒம்பும் மரபினைக் கடியின் அருள் சுரந் துட்டும் அமுத சுரபி'யைப் பெறக்கூடும் என்று காட்டி, தான் வைதிக சமயத்துக்கு மாறுபட்ட உண்மை யைப் புலப்படுத்துகிருர். இந்திர உலகின் இழிதகைமை சாத்தனர் மற்ருெரு பெரும்புரட்சியையும் செய்கின் ருர். இம்மையில் நம் வாழ்விடைச் செய்யும் புரட்சிகள் பல இருக்க, மறுமையில் பெறும் இந்திர உலகையே. துச் சமாகக் காட்டுகிருர். தேவர் அனையர் கயவர்' என்ற 'பொய்யில் புலவராம் வள்ளுவர் வழி நிற்பவர் ஆதலின், அத் தேவலோகத் தலைவனையே முன்னிறுத்தி, அத் தேவ லோக வாழ்வு எவ்வளவு கீழ்மையும் இழிதகைமையும் உடையது என்பதைத் தெளிவாக உணர வைக்கிருர். ஆபுத்திரன் அளவுக்கு மீறிய அறச்செயல் இந்திரனை நடுங்க வைக்கிறது. இந்திர போக வாழ்வு, நாடகக் காட்சிக்கோ படக் காட்சிக்கோ நுழைவுச் சீட்டினைப் பெற்றுச் செல்வது போன்றது என்பது எல்லாச் சமயங் களும் கொண்ட உண்மை. ஒருவன் செய்த புண்ணியத் தின் பலன் முடியும் வரையில்தான் அவன் அங்கிருக்க முடியும். பிறகு அவன் பூமிக்குத் தள்ளப்படுவான், மேலும் இந்திர பதவி பிறவற்றினும் குறைந்தது. வாழும் இந்திரனைக் காட்டிலும் அதிகமாக ஒருவர் அறம் ஆற்றின், உரிய இந்திரன் காலம் கடப்பதன் முன்பே தள்ளப் பெற்றுப் புதியவன் அப் பதவியையும் இந்திராணியோடு வாழும் வாழ்வையும் பெறுவான் போலும். இந்த அடிப் படையில்தான் ஆபுத்திரனுடைய அறம் இந்திரனுக்கு நடுக்கத்தை உண்டாக்கியது எனச் சாத்தனர் காட்டு, கிருர். தன் பதவிக்கே கேடு வந்ததென அறிந்த இந்திரன் கிழ வேடங்கொண்டு பூமிக்கு வந்து, ஆபுத்திரன் முன்,