பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. 'நன்கு சொன்ன ஒரு பிராமணப் பிள்ளைக்குக் கொடுத்ததா கச் சிலப்பதிகாரம் செப்புகிறது. எனவே இத்தகைய வற்றை அறமல்ல எனக் கண்டிக்க நினைத்த சாத்தனர் உயிர்களுக்குள் யாதும் வேறுபாடு கருதாது உயிர்கள் எல்லாவற்றிற்கும் உணவளித்தலே சிறந்த அறம் எனக் காட்டுகின்ருர், --- "அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்' –25/228–231 என்று கூறி, உண்டி, உடை, உறையுள் இவையன்றி வேறு எதையும்-மேலே கூறிய வைதிக வழி வரும் பிற வற்றை-அறமெனக் கொள்ளலாகாது எனத் திட்டமாகக் கூறுகிருர். இவ்வாறு அறமாற்றுவதைப் பற்றி மற்ருெரு விளக்க மும் தருகிருர், விருந்தென்றும் விழாவென்றும் வேண்டிய வர்களை அழைத்து வைத்துப் பொழுது போக்கும் இன் றைய வன்கண்மையையும் சாத்தனர் கண்டிக்கத் தவற வில்லை. ஆற்ருமக்களுக்கு அளிப்பதே உண்மையில் கொடையாகும் என்ற உண்மையை, "ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்ரு மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகில் மெய்ந்நெறி வாழ்க்கை மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே' \ -1 1192-96 எனக் காட்டி, மற்றவர்களை அறவிலை வாணிகராக்கி இகழ் கின்ருர். வினையின் வலிமை நம் வாழ்வில் வினையே வலியுடையது என்பதற்கென இந்த இரு காப்பியங்களும் எழுந்தன. இளங்கோவடிகள்