பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஆதிரையின் கற்புநெறி பற்றியும் ஈண்டே நினைத்தல் வேண்டும். இல்லறம் வழுவா நெறியில் ஒழுகிய காரணத் தால், வாழ்கின்ற தன் கணவன் இறந்தான் என எண்ணித் தீப்புக முயல்கின்ருள் ஆதிரை. ஆனால், அங்கியந்தேவன் அவளைச் சுடவில்லை. அவள் தீயிடை நின்ற தன்மையைச் சாத்தனர், "படுத்துடன் வைத்த பாயல் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள்ளெரி யுருது ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொன்னிறம் வழாது விரைமலர்த் தாமரை ஒருதனி இருந்த திருவின் செய்யோள் போன்றினி திருப்ப' -16/29-34 எனக் காட்டுகிருர். எனவே பிற்காலத்தில் வந்த வெற்றுத் துறவை வற்புறுத்தும் புத்த நெறியாகிய மகாயான மரபி லன்றிச் சாத்தனர் வாழ்வாங்கு வாழும் இல்லற நெறியை யும் உளம் தூய்மையாகி அறம் போற்றும் துறவற நெறி யையும் இணைத்தே பாராட்டுகிருர். பிறவி, பற்றின் பற்றிடம் குற்றம் கொள்கலமாக இருப்பினும், இல்லறம் துறவறம் என இரு நெறியிலும் அவ்வந் நெறிக்குரிய வழியே தான் தவருது ஒழுகின் தெய்வநலம் பெறலாம் என்பது சாத்தனர் கருத்தாகும். எனவேதான் கற்பின் சிறப்பினையும் இல்லற ஏற்றத்தினையும் பிற இல்வாழ்வுக் குரிய விருந்தினரை ஏற்றல், துறவியைப் போற்றல் முதலிய பண்புகளையும் சிறக்கக் கூறி, அவற்றுடன் துற வும் வைத்துப் போற்றக்கூடிய நிலையில் தம் காவியத்தைச் செய்கின்றர். பெளத்த தருமத்திலேயே பத்தினிப் பெண்டிருக்கு உரிய ஒழுக்கங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. சாத்தனர் கருத்தெல்லாம் இல்லறம் துற வறம் இரண்டிடத்தும் தம் சமயமாகிய பெளத்தத்தைப் பரப்பவேண்டும் என்பதேயாகும். 1. டாக்டர் ஐயர் முன்னுரை-பக்கம் 10, 105.