பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வாழ்க்கைப் புரட்சி ஆதிரையின் கணவனகிய சாதுவன் வாழ்வில், உல கில் இருவேறு வகைப்பட்ட மக்கள் வாழ்வதைக் காட்டி, அவற்றுள் ஏற்றமிக்க வாழ்வு எது என்பதையும் நன்கு விளக்குகிருர், கலத்திலிருந்து தப்பிய சாதுவன் நக்க சார ணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மைய யிைனன்' என்பர் சாத்தனர். அத் தீவு முன் நாம் கூறிய நாகநாட்டுத் தீவுகளில் ஒன்ருகக் கொள்வதிலும் நிக்கோ பார்தீவுகளில் ஒரு சிறு தீவு எனக் கொள்வது பொருத்த மெனக் கொள்வர் சிலர். நாகர் மலையைச் சார்ந்த சாதுவன், அம்மக்களின் குரு முன்னர் அழைத்துச் செல்லப்பெற, அவன் கற்ற அவர்கள் மொழியிலேயே பேசத் தொடங்குகிறன். குருமகனுக்கும் சாதுவனுக்கும் இடையில் நடைபெறுகின்ற உரையாடலே ஈண்டு எண்ணத்தக்கது. இன்றைய உலகில் நன்ருகக் குடித்துப் புலாலும் புழுக்கலும் உண்டு, கண்ட மகளி ரொடு களிநடம்புரிவதை நாகரிகமெனச் சிலர் போற்றுகின் றனர். பண்பின் நிலைக்களகிைய தமிழ்நாட்டிலேயே இத் தகைய கூத்தும் பாட்டும் குடியேறி ஆட்சி செலுத்தத் தொடங்கியுள்ளமை அறிவோம். "பெண்டிர், உண்டி’ இவை இரண்டுமே மனிதருக்கு இன்றியமையாதன என எண்ணும் மாக்களும் அவர்வழிச் செல்லும் சமுதாயமும் அச் சமுதாயத்தில் உயர்ந்தார் எனப் பெறும் ஒரு சிலரும் இன்று வாழ்ந்து வருவதைப் பல நாகரிக நாடுகளில் கண்கிருேம். ஆனல் அதே வேளையில் குறளும் கீதையும் பிற அறநெறி பற்றியும் சமயம் பற்றியும் பறைசாற்றும் நூல்களும் பல இலட்சக்கணக்கில் அச்சிடப் பெற்று வழங்கப் பெறுகின்றன. இந்த இரண்டின் இடைப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழும் சில நல்லவர்கள் செய்வதறி யாது திகைக்கின்றனர்.மறுபிறப்பைப் பற்றிக் கவலையுருது உயிரைப் பற்றி ஒன்றும் சிந்தியாது, உடலைமட்டும் ஒம்பி அதன் ஆவலை நிறைவேற்றும் வெறும் மிருக உணர்ச்சி