பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 அல்லறம் செய்வோர் அருகர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்' -16/84-90 எனக் காட்டி, கள்ளும் கொலையும் தள்ளப்படவேண்டியமக்கள் நீக்க வேண்டிய - இரு கொடுமைகள் எனச் சுட்டு கிருர் ஆல்ை சாத்தனர் அத்துடன் அக் குருமகனைத் திருத்த முடியா நிலையில் அவன் வாயிலாகவே வேருெரு விைைவ விடுத்து, இன்றைய உலகில் வாழும் நம்மில் பலருக்குத் தேவையான நல்ல விடையினையும் சாதுவன் வழியாகத் தருகின் ருர், 'உடம்புவிட் டோடும் உயிர் உருக் கொண்டோர் இடம்புகு மென்றே எமங்கிங் குரைத்தாய் அவ்வுயிர் எவ்வணம் போய்ப் புகும்?" என் கிருன் குருமகன். அதற்குப் பதிலாகத் தர்க்க ரீதியில் சாதுவன், "உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின் தடிந்தெரி ஊட்டினும் தான் உணரா தெனின் உடம்பிடைப் போன தொன் றுண்டென உணர்நீ போளுர் தமக்கோர் புக்கிலுண் டென்பது யானே அல்லன் யாவரும் உணர்வர்' – 16/96–101 என்று உயிர் உடம்பினின்று நீங்குவது உண்மையென் பதையும் அது வேறு இடத்தில் சென்று சேரும் என்பதை யும் சுட்டிக் காட்டி, அது பெறும் பிறப்பினைக் காட்டி, மேலும் அவர்கட்கு வேண்டிய அறத்தையும் உணர்த்தித் திரும்புகிருன் சாதுவன். இந்தக் கதையில் சாத்தனர் இன்றைய உலகில் போட்டியிடும் இருவேறு கொள்கை களைச் சுட்டி, அதில் வெல்லவேண்டுவது யாது என் பதைத் திட்டமாக உணர்த்துவதுபோல அறமுரைக் கின்ரு ரன்ருே!