பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஈண்டுக் காமம் என்பது சங்க இலக்கியத்தில் வழங்கும் காதன் மனையாளும் காதலனும் கொள்ளும் வாழ்வின் உயர் பொருளன்றி, பின்வந்தார் வாக்கின்படி இழிபொருளில்- மிகுபேராசை' என்ற வகையில் அமைந்தது எனக் கொள்ளல் வேண்டும். உண்மையி லேயே சங்க இலக்கியத்தில் காணப்பெறும் இன்ப வாழ் வைச் சாத்தனர் வெறுப்பவராயின், நாம் மேலே கண்டபடி கற்பொடு புணர்ந்த இல்லறமாம் காதல் வாழ்வின் ஏற்றத்தை எண்ணிக் காட்டமாட்டாரன்ருே? மேலும் அவரும் இளங்கோவடிகளைப் போன்று துறவியாக வாழ வில்லை என்பதும் கூலவாணிகம் செய்து குடி ஓம்பி இல்லறத்தை மேற்கொண்டவர் என்பதும் ஏற்கக் கூடியன அல்லவோ! அரசியல் பற்றி நாட்டு மக்கள் அனைவரும்-ஏன்?-உயிர்கள் அனைத் தும் நலமுற்று வாழவேண்டும் என்பதே சமய வாழ்வின் அடிப்படை-சமுதாய நெறியின் அடிப்படையும் அது தான். அரசியல் நெறியும் அதுவேயாகும். ஆளுகின்ற அரசு, நாட்டு மக்களுக்கு-உயிர்களுக்கு என்று எல்லாச் செல்வ வளங்களையும்-குறைந்தது உண்டி, உடை, உறையுள் ஆகியவற்றை-வழங்குகின்றதோ அன்றே நாடு சிறந்ததாகும். இதை என்றும் எல்லாக் காலங் களிலும் ஆட்சியாளர் செய்யக் கடமைப்பட்டவராவர். சாத்தனர் என்றும் இல்லாவிடினும் விழா நாட்களிலா யினும் நாட்டுமக்கள் நலம்பெற வேண்டும் என விரும்பு கிறர். எனவேதான் பட்டத்து யானை மீது அமர்ந்து, அரசர்க்குரிய வள்ளுவ முதுமகன், விழா அறையும்போது, "பற்ரு மாக்கள் தம்முட யிைனும் செற்றமும் கலாமும் செய்யா தகலுமின்' —1/52-63 என்றும்,