பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 'பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி அணிவிழா அறைந்தனன்" —1/70-72 என்றும் காட்டுகிருர். அத்தகைய ஒன்றிய-மாறுபாடற்ற அரசியல் வாழ்வே சமூக வாழ்வைச் செம்மையாக்க வல்லது என்பதை நன்குணர்ந்தவர் சாத்தனர் மட்டு மன்றி, அக்காலத்தில் வாழ்ந்த எத்தனையோ புலவர்கள் இந்த அடிப்படை உண்மையினையே அரசாளுவோருக்கு' உணர்த்தியுள்ளனர். மேலும் அரசர்களுக்கு உரிய இன்றி யமையா அங்கங்கள் இவை இவை எனக்காட்டி, அவ் வங்கங்களைச் சேர்ந்த நல்லோர் இணக்கத்திலேயே நாட் டைத் திறம்படக் கொண்டு செல்ல வேண்டுமெனக் குறிப் பிடுகிரு.ர். நல்லவர் நாட்டில் ஆண்டால் மக்களும் உயிர்களும் மகிழ்ச்சியில் திளைத்து, எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தி வாழ்வார்கள் என்பதைப் புண்ணியராசன் ஆட்சி யைக் காட்டி நமக்குச் சாத்தனர் விளக்குகிறர். இவன் ஆட்சியைப் பற்றி முன்னமே அவன் நாட்டினைக் கண்ட போது ஒரளவு கண்டிருக்கிருேம், "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நலலை வாழிய கிலனே' -புறம் 187/3-4 'மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் ருேன்றிலும் காலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்' -புறம் 35/27-29 என்பன போன்ற புறநானூற்று அடிகளில் காணும் அரசியல் அடிப்படை உண்மைகளை எண்ணிய சாத்தனர் நாகபுர நல்லாட்சியைக் காட்டி நம்மை உணரச் செய்கிருர் .