பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 கருத்தையும் உண்டாக்குகிருர். அதனால் விழாவிலும் பசி யும் பிணியும் பகையும் நீங்க வேண்டும் என முரசறைய வைக்கிறர். உண்மையும் அதுதான். நல்ல நாட்டுக்குநல்ல அரசுக்கு இலக்கணம் தன்னட்டு மருந்தகங்களில் ஒரு நோயாளிக்கூடக் கிடையாது' என்று சொல்லுவது அன்றி, ஊர்தொறும் மருந்தகங்கள் கட்டிவிட்டோம் என்று சொல்வது அன்று. எந்த நாட்டில் மருந்தகங்கள் நோய் உற்றறின்றிச் சிறக்கிறதோ அந்த நாடே வள்ளுவர் போன்றேர்கள் காண விழைந்த பொன் டுை என்பதைச் சாத்தனர் தெள்ளத்தெளியக் காட்டிவிட்டார். மேலும் நோய்க்குக் காரணமாகிய பசியினைக் காட்டி, அதன்வழி மாருய பேருண்டியையும் சுட்டுகிருர் எனக் கொள்ளலாம். 'அருந்தியது அற்று அது போற்றி உண்ணும் நோயற்ற வாழ்வினை வள்ளுவர் காட்டுகிருர் அன்ருே? பகையை வள்ளுவர் பலவகையில் காட்டுவர். சாத்த னர் அவை எல்லாவற்றையும் உள்ளடக்கி, நாட்டில் எப்பகையும் இல்லை என்ருல்தான் நலம் காணமுடியும் என்ற உண்மையை உணர்த்துகிருர். எனவே சாத்தனர் அரசியல் தெளிவும் அறிவும் வாய்ந்த ஒருவர் என்பதும் அவர் காணவிழைந்த அரசியல், உலகில் என்று மலரும்’ என்ற நிலைதான் அவர் மறைந்து 2000 ஆண்டுகள் சென்ற போதிலும் இன்றும் உள்ளது என்பதும் நினைக்கத் தோன்றுகின்றன. சாத்தனர் மருந்தகம் மட்டுமன்றிச் சிறையும் வெற். றிடமாகவே இருக்க வேண்டுமென விழைகின்றர். அப் பணியையும் மணிமேகலையைக் கொண்டே செய்கிரு.ர். 'சிறைச்சாலையில் இடமில்லை, திறந்தவெளிச் சிறைச்சாலை அமையுங்கள்’ என்று கூறும் அரசினைக் காட்டிலும், "எங்கள் சிறைச்சாலையுள் ஒரு கைதிகூட இல்லை என்று கூறும் அரசே நாட்டிற் குகந்தது என்பதைத்தான் சிறைக் கோட்டத்தை அற கோட்ட மாக்கிய காதை நமக்கு வற். புறுத்துகின்றது. சோழ மன்னன் மணிமேகலையின் வாய் மொழி கேட்டு,