பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 "கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க் காக்கினன்" -191161–162 என மாற்றி அமைத்தமையைக் காட்டுகிறர். சிறைக் கோட்டத்தில் கைதிகள் இல்லா நிலையைக் கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்' என்றே காட்டுகிருர். இதே கருத்தினை, 'சிறைப்படு கோட்டம் சீமின் யாவதும் கறைபடு மாக்கள் கறை வீடு செய்மின்' -சிலம்பு. 23l126-127 என்றும், 'சிறையோர் கோட்டம் சீமின் யாங்கணும் கறைகொழு நாடு கறைவீடு செய்மின்' சிலம்பு. 28.1203-204 என்றும் இளங்கோவடிகளும் விளக்கி உள்ளமை அறிதல் வேண்டும். எனவே, சாத்தனரின் புரட்சிக் கருத்தினை இக்காலத் தவர் ஏற்றுக் கொண்டாலும், அன்றிக் கைவிடினும், அவர் காட்டிய பசி, பிணி, பகை, சிறை, நோயாளி' என்பார் இல்லாத நிலையில் உள்ள நாடே நாடெனத் தக்கது என்பதை நல்லவர் ஏற்றுக்கொள்ளக் கடமைப் பட்டவராவர். அரசன் நீதி செலுத்தக் கடமைப்பட்டவன் என்ற உண்மையை மற்றேரிடத்தில் சாத்தனர் காட்டுகின் ருர், உதயகுமரன் வாளால் மாய்க்கப்பெற்றதை அறிந்த சோழமன்னன் தன் மகன் இறந்ததற்கென வருந்தாது, மற்ருென்றிற்காகவே வருந்துகின்றன். ஆம்! அவன் குடியின் முன்னேர்களை அவன் உள்ளம் எண்ணுகிறது.