பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

தாதே. இதோ என் கையில் ஒரு பிச்சைக்கலம் உள்ளது. நாடு வறுமையுறினும், இவ்வோடு வறுமையுறாது. வாங்குவோர் கை வருந்து மேயல்லாது, வழங்கும் இவ்வோடு வருந்தாது. இதன் துணையால், உயிர்களின் பசி நோயைத் துடைப்பாய்: எழுந்து வந்து எடுத்துக்கொள்” எனக் கூறிக் கொடுத்து மறைந்தாள். சிந்தாதேவியின் நந்தாவுதவியை நினைந்து, ஆபுத்திரன் அவளை நாவாரப் பாடிப் பரவினான்; பசித்து வந்தோர் நோயை அப்பாத் திரத்தின் துணையால் போக்கினன். வழங்க வழங்க வற்றாது சுரக்கும் பாத்திரம் பெற்றமையால், வாங்குவோர் தொகை மிகுந்தது. மக்களேயல்லாமல், மாக்களும், மரம் வாழ் பறவைகளும் அவன் அளிக்கும் அவ்வுணவை வேட்டு, அம்பலத்தில் குழுமின. பழுமரம் தேடிவந்தடையும் பறவைத் திரள்களென, உயிர்களின் கூட்டம் ஊரம் பலத்தில் மிகுந்தது. உண்ணும் ஒலி, ஆங்கு எப்பொழுதும் ஓவென ஒலித்தவாறே இருந்தது.

ஆபுத்திரன் ஆற்றும் நல்லறத்தால், இந்திரன் வீற்றிருக்கும் பாண்டு கம்பளம் நடுங்கிற்று. அதன் நடுக் கத்தால், ஆபுத்திரன் அறப் பெருமையை அறிந்த வானோர் தலைவன், அவனுக்கு வேண்டுவ அளிக்க விரும்பினன். மறையோன் உருவில் மண்ணுலகெய்தினான். மதுரை மன்றம் அடைந்து ஆபுத்திரனைக் கண்டான். இந்திரன், “யான் நீ ஆற்றும் அறத்திற்குரிய பயனை உனக்கு அளிக்க வந்தேன். நீ விரும்புவது யாது?” என வினவினன். இந்திரன் வினவியது கேட்டு ஆபுத்திரன் விலாவெலும்பொடிய நகைத்துவிட்டு “ஈண்டு ஈட்டிய அறத்தின் பயனை இருந்து துய்ப்போரல்லது அறஞ்செய்வோரோ புறங்காத்து ஒம்புவோரோ நற்றவம் ஆற்றுவோரோ பற்றற முயல்வோரா வாழ்ந்