பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பல்லவத் தீவிற்கொண்டு சென்று நங்கூரம் இட்டான். பாய்கள் இறக்கப் பெற்றன. கலம், ஆங்கு ஒருநாள் நின்றது. மணிபல்லவத்தின் மாண்புகளைக் கண்டு மகிழும் கருத்தோடு ஆபுத்திரன் கலத்தினின்றும் இழிந்து அத்தீவினுட் புகுந்தான். காற்று நின்றது. கலத்தில் வந்தோர், மீண்டும் கலத்தில் ஏறிக்கொண்டனர். ஆபுத்திரனும் ஏறியிருப்பன் என எண்ணி, மீகாமன் கலத்தை மால்கடலிடைக் கொண்டு சென்றான்.

கலம் சென்றுவிட்டது. களம் சென்ற காலம் இரவாதலின், கலம் சென்றதை ஆபுத்திரன் அறிந்திலன். விடிந்து வந்து நோக்கினன். வங்கத்தைக் காணாது வருந்தினான். மீண்டும் மணிபல்லவத் தீவின் உள்ளகம் சென்று, உயிர் வாழ்வார் உளரோ எனத் தேடினன். ஒருயிரும் அவன் கண்ணில் புலப்பட்டிலது. “அந்தோ! என் கையில் உள்ளதோ ஆருயிர் ஒம்பும் அமுதசுரபி, ஆனால் அதைப் பெற்ற யான் இருப்பதோ வாழ் உயிர் அற்ற வன்னிலம். பலகோடி உயிர்களின் பசியைப் போக்கவல்ல இப்பாத்திரத்தால் என் ஒருவன் புசியைப் போக்கும் இழிநிலையை யான் விரும்பேன்; பண்டைப் பிறவியில் பேரறம் புரிந்த தன் பயனாய் இப்பாத்திரம் பெற்ற யான், இறுதியிற் சிறிது தீவினையும் புரிந்தேன் போலும்! அதனாலேயே பாத்திரம் பெற்றும் அதனாலாம் பயனை ஆரப்பெறாமல் அழிகின்றேன். இதை, இனி வறிதே சுமந்து விாழேன்” எனக்கூறி வருந்தியவாறே சென்றான். வழியில் கோமுகி என்ற பொய்கையொன்று புலப்பட்டது. அதை அணுகியதும் “ஆருயிர் மருந்தாம் அமிழ்தினை அள்ளி அள்ளித் தரும் அமுதசுரபி உன்ன இப்பொய்கையில் இட்டு உயிர் துறக்கத் துணிந்தேன்; நீ, இப்பொய்கையினின்றும் ஆண்டிற் கொருமுறை வெளிப்பட்டு, அருளறம் பூண்டு