பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

சுதமதியை எழுப்பிற்று. துயில் நீத்தெழுந்த சுதமதி உடன் வந்த மணிமேகலை தன் அருகில் இல்லாமை கண்டு கலங்கிளுள் அவ்வாறு கலங்குவாள், தன் முன் நிற்கும் மணிமேகலா தெய்வத்தின் திருவுருவுகண்டு நடுங்கினுள். சுதமதியின் நடுக்க நிலை கண்ட மணி மேகலா தெய்வம், "மகளே! அஞ்சேல். நான் மணி மேகல்ா தெய்வம். மணிபல்லவத்திடை வாழ்வேன். புகார் நகரத்துப் பெருவிழாவான இந்திர விழாவைக் காண வந்தேன். வந்த இடத்தில் மணிமேகலைக்கு மாதவநெறி மேற்கொள்ளும் நல்வினை வாய்க்கப் பெற்றமை அறிந் தேன். அதனுல், அவளே என் தெய்வத்திருவருளால் மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்துள்ளேன். ஆங்கு அவள் தன் பழம் பிறப்புணர்ந்த பெருமையளாகி, இற்றைச் கு ஏழாம்நாள் ஈங்கு வந்தடைவாள் வருவோள் தன் வடிவு கரந்து வருவள். எனினும் உன்னை மறவாள்; உனக்கு ஒளிந்து வாழாள். அவள் இப்பேரூருட் புகும் அன்று ஈங்கு அரிய பல நிகழ்ச்சிகள் நிகழும். சுதமதி: நீ மாதவர் உறைவிடம் புகுந்து, என் வருகையையும் மகள் மாசிலாத் தவநெறி மேற்கொண்டதையும் மாத - விக்கு அறிவிப்பாயாக. அவள் என்னை அறிவாள். கட லிடையே வாழும் கடவுள் யான் என்பதைக் கோவலன் அவளுக்கு முன்னரே அறிவித்து, என் பெயரையே தன் மகளுக்குச் சூட்டியுள்ளான். பெயர் குட்டிய் அப்பெரு நாளன்று இரவில், மாதவி கனவில் தோன்றி, மாதவி! மாபெரும் தவக் கொடியை மகளாய்ப் பெறும்பேறு பெற்ற நீ வாழ்க’ என வாழ்த்தியும் உள்ளேன். அதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாத்தன்_கதைகள்.pdf/97&oldid=561472" இலிருந்து மீள்விக்கப்பட்டது