பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

சாந்தியின் சிகரம்

முன்னறி தெய்வம் என்ற தத்துவத்தை நிலை நாட்டினார். இது போல், இன்னும் எத்தனையோ உபமானங்கள் நம் நாட்டில் புதையல் போல் கிடக்கின்றன. அவைகளைப் படிப்பவர்கள் ஆயிரக்கணக்கான மக்களாக இருக்கலாம். ஆனால், அந்த நுட்பமான ஸாரத்தை அறிந்து, க்ஷண நேரமாவது அனுபவித்துச் செய்கிறவர்கள் உண்டா? அல்லது சிந்தித்துப் பார்ப்பவர்களாவது உண்டா!

மருத்துவத் தொழில் மூலம், எத்தனை விதமான உள்ளத் துடிப்புகளை… மகிழ்ச்சிகளை, ஆனந்தச் சிறகடித்துப் பறக்கும் புதிய, புதிய உத்ஸாகங்களைக் காண சந்தர்ப்பம் கிடைக்கின்றன. இத்தகைய அனுபவங்களை நேராகக் காட்டிப் பயிற்சியளிக்கும் ஒரு அனுபவப் பள்ளிக்கூடமென்றோ! இத்தகைய உணர்ச்சிக் கலையை போதிக்கும் உயர்ந்த கலாமன்றமென்றோ! இதைச் சொல்லலாம். இதே நிமிஷத்தில் அந்தப் பெற்ற தாயின் துடிப்பையும் கண்டேன். அதே தாயின் நிகரிலாத ஆனந்தத்தையும் காண்கிறேன்… என்ன உருக்கமான காட்சி!… என்று ஸ்ரீதரன் தனக்குள் எண்ணியபடியே, நோயாளியைக் கவனிப்பது போல், சிந்தனைச் சுழலில் சிக்கிச் சுழல்கிறான்.

அதே சமயம்… அடாடா! இத்தகைய அநித்யமான பாசபந்தத்தில் உழன்று மாறி, மாறி சுகமும், துக்கமும் அனுபவிப்பதையே மக்கள் சாச்வதமாய் எண்ணுகிறார்களே! இந்த அல்ப விஷயங்களில் உண்மையான மனச்சாந்தியை அடைய முடியுமா ! இவைகள் காலை வழுக்கும் பாசியல்லவா! மக்கள் பிறந்ததன் லக்ஷ்யத்தை அறியும் மார்க்கத்தைக் கூடச் சிந்திக்கத் தோன்றாமல் உண்டியே, உடையே! என்றும், ஊனே, ஊனே, உடலே! என்றும் சுயநலத்திற்குப் பாடுபட்டுக் காலத்தைக் கழிப்பதா சகலமான பிறவிகளைக் காட்டிலும் உயர் தரமான ஆறறிவு படைத்த மக்களின் லக்ஷ்யம்? என்ன விசித்திரமான உலகம்! துன்பத்தையே இன்பமாக நினைப்பதும், இன்பத்தையளிக்கும் சகலமான சிறந்த விஷயங்களையும், கடுமையான துன்பத்-