பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

சாந்தியின் சிகரம்

தன் பிதாவின் பலவிதமான படங்கள் அதில் அலங்காரமாயிருப்பதையும், உஷா சிறு குழந்தையாயிருக்கையில், அதை அவர் கையில் வைத்துக் கொண்டுள்ள புகைப்படத்தடியில், “என் கண்மணி உஷாவின் பிறந்த நாள் இன்று; அவள் சகல மங்களத்துடனும் வாழ வேண்டும்…” என்று அவர் கைப்பட எழுதியிருக்கும் எழுத்துக்களையும் பார்த்த தாமோதரனுக்குத் தன் மீது இடிஇடித்தது போலாகி விட்டது.

தன் பிதாவின் புகைப்படங்கள் வீட்டிலுள்ளதை எல்லாம் இதோடு ஒப்பிட்டுப் பார்த்தான். அவருடைய எழுத்துக்களை எல்லாம் சேர்த்துப் பார்த்தான். இன்னது சொல்வது, செய்வது என்பதே தெரியாமல், தடை கட்டிய நாகம் போல் தர்பித்து நின்று விட்டான். திரும்பத் திரும்ப அவைகளை உற்று, உற்றுப் பார்த்தான்… உஷா என் சகோதரியா!… உஷா ஒரு தேவதாசியின் மகளா… என்கிற வார்த்தைகள் அவன் இதயத்தில் மாறி, மாறி ஒலித்து இம்ஸை செய்து வாட்டுகின்றன… சில வினாடிகள் ரௌத்ராகாரமான நிலைமையில் மவுனமாக இருந்தவன், திடீரென்று,தன் அண்ணனை நோக்கி, “அண்ணா! இவைகளெல்லாம் உண்மையான விஷயமா…” என்று அசட்டுக் கேள்வியை, முரட்டுத்தனமாகக் கேட்டான்.

ஸ்ரீதரன் சிரித்துக் கொண்டே “தம்பீ! இதென்னக் கேள்வியப்பா! நம்மை விட்டு நம் தந்தை பிரிந்து, எத்தனையோ நாளாகி விட்டது. அவர் இங்கு இருந்த காலத்தில், இப்படங்கள் எடுத்திருப்பதை இதோ ப்ரத்யக்ஷமாக, இவைகளே காட்டுகின்றன. இதை யாராவது மாற்றவோ, சூது வாதுகள் செய்யவோ முடியுமா! யோசித்துப் பாரு தம்பீ! இன்னும் வேணுமானால், அப்பா எழுதிய பழய கடிதங்கள் கிடக்கின்றனவே! அவைகளையும் ஒத்திட்டுப் பாரு… இனி அனாவசியமாய், இவ்விஷயத்தில் சர்ச்சை செய்வது, மிகவும் கேவலமாகி விடும். எந்த ஒரு கீழ் ஜாதியில் கூட, தன் சகோதரியைத்தான் மணப்பது என்ற மிருகத்தன செய்-