பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

சாந்தியின் சிகரம்

ரத்தை எட்டி, ஆனந்தானுபவம் செய்ய முடியும். அதை விட்டு, சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் மனத்தை பறி கொடுத்து அலட்டிக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறுவது எப்படியப்பா! இந்த சம்பவம், வாழ்க்கைப் பாதையில் ஒரு படிப்பினையைக் காட்டியதாக எண்ண வேணும். இம்மாதிரி விசித்திரங்கள் உலகத்தில் எல்லோருக்கும் நடக்காது. எங்கோ, ஆயிரத்தில் ஒரு இடத்தில்தான் நடக்கும். க்ரகண மூளி எங்கேயோ ஒருவருக்குத்தான் வரும் என்பார்கள் பார், அது போல், நம் குடும்பத்தில்தான் இந்த வினோத சம்பவம் நடந்திருக்கிறது. இதை எண்ணியே, வீணாகக் கவலைப்படாதே.

இந்த காரணத்திற்காக, விவாகம் தடைபட்டு விட்டது என்பது பிறருக்குச் சொல்ல வேண்டாம். அவர்கள் தேவதாசிகள் என்பது உலக ப்ரஸித்தம். அந்த ரகஸியம் தெரியாமல் முதலில் விசாரித்தோம், இந்த விவரம் தெரிந்ததும், நிறுத்தி விட்டோம் என்று சொன்னால், பொருத்தமாகவிருக்கும். இதைப் பற்றிக் கவலைப்படாதே. வேறு உனக்குப் பிடித்தமான பெண்ணைச் சொல்லு; உடனே ஏற்பாடு செய்கிறேன், இந்திராவும், சந்திராவும் ஊருக்குப் போவதற்குள், இதை முடித்து விட்டுப் போகலாம். இன்று பூராவும் நீ யோசனை செய்து பதில் சொல்லு…” என்று கூறினான்.

அதே சமயம், டாக்டருக்கு அவசரமான டெலிபோன் அழைப்பு வந்ததால், பரபரப்புடன் எழுந்து சென்று விட்டான். அதே சமயம் தாமோதரனுக்கும் டெலிபோன் வந்தது; உடனே சென்று பேசத் தொடங்கினான்… “ஹல்லோ… யாரு … உஷாவா…”

உஷா:- ஆம் அண்ணா! நமஸ்காரம்…

தாமோ:- இதென்ன உஷா…

உஷா:--என்னவா! இன்னும் புரியவில்லையா! பழய சகாப்தம் முடிவடைந்து விட்டது…நான் தேவதாசி வகுப்-