பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

சாந்தியின் சிகரம்

சுமார் 60 வயதுக்கு மேல்பட்ட வயோதிகர், ப்ரமாதமான ஜூரத்தினால் படுத்திருக்கிறார். வேறு டாக்டர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிழவரின் கட்டிலுக்குச் சமீபத்தில், 25 வயது கூட நிரம்பாத ஒரு யுவதி கண்ணீர் பெருக நிற்கிறாள். இன்னும் சுற்றத்தார்கள் ஏராளமானவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்… பெரிய டாக்டர் வந்து விட்டார்… என்ற பரபரப்பு உண்டாகியதும், சிறிய டாக்டர்கள் இவனையழைத்து, சகலமான விஷயங்களையும் கூறி, தாம் உபயோகப்படுத்தியுள்ள மருந்துகளையும் தெரிவித்தார்கள்.

கிழவருக்கோ ஜுர வேகத்தில், நினைவு தப்பி விட்டது. நிலைமை மிகவும் மோசமாகி விட்டதால், வீடே அமளி குமளி படுகிறது. ஸ்ரீதரன் வெகு அக்கறையுடன் கவனித்து, வேறு சில மருந்துகளை ஊசி மூலம் ஏற்றுகிறான். அவனுடைய காது சிலவற்றைக் கவனிக்கின்றது, கண் சிலவற்றை வெகு கூர்மையாகக் காண்கிறது; கருத்து ஒருபுறம் வேலை செய்கிறது. அதே சமயம் வாசலில் ஒரு பிச்சைக்காரன்,

“காயமே இது பொய்யடா
 காற்றடைந்த பையடா”

என்கிற பாட்டைப் பாடி பிச்சை எடுப்பதும், காதில் விழாமலில்லை. வீட்டுக்குள்ளேயே அடுத்த ரூமிலிருந்தும், தாழ்வாரம் கூடத்திலிருந்தும் இன்னார் என்ற விவரம் புரியாத நிலைமையில்… வயதாகிய கிழந்தானே?… ஏதோ மேல் கொண்டு செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டாமா… கிழவர் கைப்பெட்டி சாவி யாரிடம் இருக்கிறது… உயில் ஏதாவது எழுதியிருக்கிறாரா… பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாயில் சொல்லிக் கொண்டிருந்தார்… அப்பவே எழுதி வைக்கும்படி சொன்னோம். கிழப் பிணம் கேட்கவில்லை. இப்போது வாயைப்