பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

102

நிற்கக் கூடாது… போய் விடு! வெளியே தொலைந்து போய் விடு… ஏ சண்டாளா! பதிதா! போய் விடு… உம் போ! போ] போ!” என்று வீராவேசங் கொண்டு, தன்னை மீறிய ஆத்திரத்துடன் தன் மகளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியவாறு, முதுகிலும் நன்றாக அடித்துத் தள்ளி, அவளுடைய கணவன் என்று சொல்லிய வெள்ளைக்காரனையும் உதைத்துத் துரத்தினார். ஸ்ரீதரனும், தாமோதரனும் எத்தனை தடுத்தும், எங்கிருந்துதான் அவருக்கு அந்த சமயம் அந்த நிலையில், பத்து யானை பலம் வந்ததோ, அதை ஒருவராலும் அறிய முடியவில்லை. வெள்ளைக் காரனுக்கு வந்த அவமானத்திலும், ஆத்திரத்திலும் என்னதான் செய்து விடுவானோ என்கிற பயம் வேறு பாதித்து, ஸ்ரீதரனை நடுக்கலுறச் செய்கிறது.

துரைக்கண்ணனின் நிலைமை மறுபடியும் மோசமாகி விட்டது; எனினும் இந்த அக்ரமத்தைக் கண்டு தாளாமல், ஆவேசத்தை விடாமல், “என் வயிற்றில் பிறந்த பெண்ணை கப்பலேற்றிய அன்றே செத்து விட்டதாக எண்ணி விட்டேன். என் கண்மணிக்காக நான் செய்த த்யாகமும், அதற்காக அவள் செய்த த்ரோகமும் இனி என்னால் சகிக்க முடியாது! தன்னுடைய தாய்நாடு, தன்னைப் பெற்ற பிதா, தான் பிறந்த குலம், தன்னுடைய சிறந்த மதம், தன்னுடைய புனித கடமை எல்லாவற்றையும் மறந்து, துறந்து சிற்றின்பப் பேயிக்கு அடிமையாகி, மதம் விட்டு மதம் மாறி மானங்கெட்டு, என் முன்பு தைரியமாக வந்து நிற்கும் இவளை இப்போதே கொன்று விட்டு, நானும் தூக்கு மரத்தில் தொங்கலாடுகிறேன். பாவிப் பெண்ணைப் பெற்ற இந்தப் பாவியும் கொலை பாதச் சண்டாளனாகட்டும்! மிகச் சிறந்த பாரத நாட்டில் பிறந்த ஒரு இந்து பெண்மணி இப்படி செய்தாள் என்று உலகம் தூற்றும் போது, என்னையும் சேர்த்துத் தூற்றட்டும்! தன் தாய்நாட்டின் கண்ணியத்திற்காக, தன் மதத்தின் பெருமைக்காக, தன் ஜாதியின் சிறப்புக்காக, தன் பெண்ணைத் தானே கொன்றான். தன் கைகளாலேயே கொன்றான்—என்று உலகம் என்னைக்