பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

சாந்தியின் சிகரம்

வேண்டும் என்று அவர் நேற்றுதான் என்னிடம் கூறினார்! நான் விவாகமே செய்து கொள்ளும் அபிப்ராயமற்றவன் என்பது இந்த ஊரே அறியும். என் தம்பி தாமோதரனுக்கு இதை முடித்து வைக்கலாம் என்ற நோக்கத்துடன், நான் தம்பியுடன் இன்று அவர் அழைப்புக்கிணங்க வந்த பிறகுதான், இப்போதே ஆகாய விமானத்தின் மூலம், தன் மகள் வரப் போகும் விஷயத்தைத் தெரிவித்தார். அதே சமயம் அவர்களும் வந்து விட்டார்கள்.

தன் மகளின் வேஷத்தையும், மத மாற்றத்தையும், விபரீத மணத்தையும் அறிந்து, அவருடைய மனந்தாளாது அவர் மகளை அடித்ததும், விரட்டியதும் உண்மை; அவரை நாங்கள் எத்தனை தடுத்தும், அடங்கவில்லை. அதே சமயம், ஸ்டோன் துரை என் மீது பாய்ந்து, என்னை அடித்துப் படுகாயப்படுத்துவதைக் கண்ட ப்ரபு, பின்னும் ஆவேசங் கொண்டு தன் மகளைக் கடினமாகத் தாக்கினார். தம் வக்கீலை வரவழைக்கும்படி குமாஸ்தாவுக்குக் கூறினார். வக்கீல் வந்த உடனே, தமது விருப்பத்தையப்படியே கடிதமாக எழுதச் செய்துத் தாமே கையொப்பமிட்டதும் உண்மை. அதை இவன்தான் அபகரித்து விட்டான். இவனை இப்போதே சோதனை செய்தால், கடிதம் கிடைக்கும் என்பது என் அபிப்ராயம். (சுந்தரத்தைக் காட்டி) இதோ வந்துள்ளவர் யார் என்பதே எனக்குத் தெரியாது, இவைகளைத் தவிர, மற்ற சகலமும் கட்டுக் கதை; பொய்யான விஷயம்” என்று ஸ்ரீதரன் வாக்குமூலங் கொடுத்தான்.

“ஸார்! என்னதான் கிராதகனாக இருப்பினும், தான் பெத்த பெண்ணைத் தானே கொலை செய்வானா? இது எந்த உலகத்திலாவது கேட்டிருக்கிறீர்களா!' சொத்துக்கும், மற்ற பாத்யதைக்கும் உரிமை இன்றி, அவளை அலக்ஷியப்படுத்தித் துரத்தி விட்டாலும் விடுவானேயன்றி, இப்படி தன் கையால் எந்த தகப்பனும் கொலை செய்ய மாட்டான். இந்த மனிதன் முன் எச்சரிக்கையாய் கட்டுக் கதையை ச்ருஷ்டித்துக் கூ றுகிறான். நாங்கள் இந்த