பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

சாந்தியின் சிகரம்

உயர்வும் ஒப்பிட்டுக் கூற முடியுமா! ஸ்ரீதரனா! கொலைகாரன்? ஸ்ரீதரனா கைதியாகி விட்டான்? ஏ! கடவுளே! உனக்குக் கண்ணில்லையா! உனக்கு நியாயமில்லையா! நீதி நிர்ணயமற்றக் கட்டையா நீ! உனக்கு இதயமில்லையா! உனக்கு பச்சாத்தாபமில்லையா! மகா விவேகியாய், சிறந்த பக்த சிகாமணியாய், த்யாகியாய் விளங்கும் என் கண்மணி ஸ்ரீதரனா கொலை செய்வான்! பரோபகாரத்திற்கே பாடுபடும் உத்தமனாகிய ஸ்ரீதரனா கொலை செய்வான்? ஸாராஸார விவேகமற்ற உன்னையா கருணாநிதி, பக்தவத்ஸலன், தீன தயாளன், தயாநிதி என்றெல்லாம் மக்கள் கூறுகிறார்கள்.”

என்று மடை திறந்த நீரைப் போல், கண்ணீர் பெருகியவாறு கதறுகிறாள். சற்று நேரத்திற்கெல்லாம், துரைக்கண்ணன் பங்களாவின் வாசலில் வண்டி வந்து நின்றது. அங்குள்ள கூட்டமும், போலீஸாரின் தடபுடலும், ஆளுக்கு ஒன்றாகப் பேசும் விமர்சனமும், அளவிட்டுச் சொல்ல முடியாது. வெறும் வேஷச் சாமியாராயிருந்து சரியானபடி கை வைத்ததனால், ஆள் அகப்பட்டுக் கொண்டான். லக்ஷக்கணக்கான ரூபாய்களுடன், ஒரு பெண்ணை தான் அடித்துக் கொண்டு போக நினைத்த போது, அவனுக்குப் போட்டியாய் ஒரு வெள்ளைக்காரனே வந்து விட்டான் என்றால்… கோபம் பாபம் சண்டாளம் என்பது பொய்யாகுமா! ஆத்திரத்தின் தீ அவனையே எரிக்கத் தொடங்கி விட்டது என்று பலவிதமான வார்த்தைகள் சொல்வது இந்திரா, சந்திராவின் காதில் விழுந்து துடிக்கிறார்கள். மகா மானியான அண்ணாவுக்குமா இத்தகைய படாப்பழி, இதென்ன உலகம்…

என்று துடிக்கிறார்கள். மெல்ல கும்பலைக் கலைத்துக் கொண்டு, கார் கேட்டுக்குள் சென்றதும், கமலவேணியம்மாள் ஒரே கதறலுடன், "ஸ்ரீதர்! ஸ்ரீதர் ! இதென்னடா கண்றாவி… ஐயையோ! உன்னையா நான் இந்த நிலைமையில் பார்ப்பது… ஐயோ! என் மகனின் உத்தம குணமும், பரோபகார சிந்தையும் உங்களுக்குத் தெரியாதா! என்