பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

116

மகனா கொலை செய்வான்? அனியாயம், அக்ரமம்!” என்று கதறியவாறு, ஸ்ரீதரனைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, தன்னை மீறிய துக்கத்தில் புலம்புகிறாள். “அண்ணா” என்று சகோதரிகள் கதறுகிறார்கள்.

தன் தாயாருக்கும் இச்செய்தி எட்டி விடும்; இத்தனை சடுதியில் இங்கு வந்து விடுவாள் என்று ஸ்ரீதரன் நினைக்கவில்லை. இந்த விஷயத்தைக் கேட்டு எப்படித்தான் அவளுடைய உயிர் துடிக்கும். அவளை யார் தேற்றி, தக்கப்படி வைத்யம் செய்வார்கள்? என்று தனக்குள் எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதரனும், தன் தாயைக் கண்டதும் “அம்மா!”வென்று தாய்ப் பசுவைக் கண்ட கன்றைப் போல் அவனும், கன்றைக் கண்ட தாய்ப் பசுவைப் போல் அவளும், ஏககாலத்தில் கதறி விட்டதால், அங்குள்ள கல் நெஞ்சம் படைத்த வெள்ளைக்காரியின் கண்களிலும் நீர் முட்டி விட்டது என்றால், வேறு கேட்க வேண்டுமா? அங்குள்ள அத்தனை பேர்களின் உள்ளமும் உருகியது.

தாயாரைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு கதறிய ஸ்ரீதரன், சற்று தன்னைச் சமாளித்துக் கொண்டு, தம்பியை நோக்கி… “தம்பீ ! விதியை விலக்க மனிதனால் முடியாது. விதியை மதியால் வெல்லலாம் என்கிற பழமொழிப்படிக்கு சாமான்ய விஷயங்களாயின், ஒரு சிறிது கை கூடும். இத்தகைய மகத்தான சோதனையை உண்டாக்கிய பகவானே, அதைத் தீர்க்க முடியுமேயன்றி, மற்றவர்களால் முடியாது. ஒரு விஷ மருந்தைக் கொடுத்த டாக்டர்தான், அதற்கு மாற்று மருந்தையுங் கொடுத்துத் தீர்க்க வேண்டுமேயன்றி, அதற்கு மாற்று பிறருக்கு எப்படித் தெரியும். ஏதோ பகவானை நம்பி, நான் நல்ல காரியத்தை எண்ணி, இங்கு உன்னையும் அழைத்து வந்தேன். பூர்வ கர்மாவின் செயல் என்னைச் சுற்றியடிக்கிறது, இந்த இடத்தில், இந்தக் கண்றாவி காட்சியைப் பார்க்க நம் தாயார் இங்கு கூடியிருப்பது சரியில்லை. இத்தகைய பயங்கர அதிர்ச்சி-