127
சாந்தியின் சிகரம்
போதும். இனி உலகம் அவனைப் போற்றி, அவன் புகழை அறியும்படிக்குச் செய்தால்தான், நீ சத்தியமான தெய்வமென்று நம்ப முடியும் … ஐயோ! எனக்குத் தோத்திரம் செய்யக் கூடத் தெரியவில்லையே! பகவானைப் பற்றிய தோத்திரப் பாடல்களோ, ச்லோகங்களோ ஒன்றுமே தெரியாது மரத்த கட்டையாய்த் தடிமரம் போல், வளர்ந்து விட்டேனே! ஒன்றுமே தெரியாத முட்டாள் பிழைப்பில் காலம் கடந்து விட்டதே!” என்று மனமுருகித் துக்கித்தவாறு உட்கார்ந்து விட்டான்.
ஸ்ரீதரன் ப்ரதி தினம் பாராயணம் செய்யும் புத்தகங்களை, அங்கு ஸரஸ்வதி பீடத்தில், அழகாக வைத்து அதன் மீது புஷ்பம் சாத்தியிருக்கும் அழகும், இவன் கருத்தைக் கவர்ந்து இழுத்தது. உடனே அவைகளை எடுத்துப் பார்த்தான். ஸ்ரீராமாயணம், பகவத் கீதை, திருப்புகழ், திருக்குறள், தேவாரம், ஸ்ரீஸ்துதி, ஸ்தோத்ர ரத்னாகரம், திவ்ய ப்ரபந்தம், ஸ்காந்த புராணம், லலிதா ஸ்தோத்ரம், திருவருட்பா, முகுந்த மாலை, திருவேங்கட சதகம் முதலிய பல பல புத்தகங்கள் இருப்பதைக் கண்டு அவற்றில் ஏதோ சில தோத்திரப் பாடல்களைப் பாடி தோத்திரம் செய்தான்; வேண்டிக் கொண்டான்; மனத்தில் ஏதோ ஒரு புனிதத் தன்மை… இன்பம்… சாந்தியின் திவலை முதலியவைகள் படருவது போன்ற ஒரு உணர்ச்சி உண்டாகியது!…
கடவுளை வணங்கி விட்டு, நேரே தாயாரிடம் வந்தான். அந்தம்மாளே எதிர்பாராத விதம் தாயாரின் காலில் விழுந்து வணங்கி, “அம்மா! என்னுடைய போதாத காலக் கொடுமையினால்தான் அண்ணனுக்கு இத்தகைய அவமான கதி உண்டாகியது. இதற்குக் காரணம் நானேதான்; எனக்காகப் பெண் பார்க்கும் பொருட்டு என்னை அழைத்துச் சென்றதனால்தானே இம்மாதிரி ஆகி விட்டது. இத்தகைய உத்தமனான அண்ணனை நான் மிகவும்