பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சாந்தியின் சிகரம்

வெகு விரைவில் வேம்பாகி விடுமேயன்றிக் கரும்பாக இருக்க முடியாது.

பதார்த்தங்களுடன், வாயில் சுரக்கும் உமிழ் நீருடன் கலந்து, சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் ஆகாரத்தின் ஸத்துக்களை விட, உமிழ் நீரின் ஸத்து அமுதம் போன்றதாகும். அதுவும் கலந்தால், வெகு நன்றாக இருக்கும். காக்காய் கொத்துவது போல் கரண்டியினால்… ஊசியினால் குத்தித் தின்பது ஒரு பெருமையும் அல்ல! ஆரோக்யமும் அல்ல!.… அடடா!… நான் ஏதேதோ விஷயங்களைப் பேசிக் கொண்டு காலத்தை வீணாக்கி விட்டேனே… நான் வருகிறேன்; பயப்படாதீர்கள்” என்று கூறிக் கொண்டு கிளம்பினான்.

இதற்குள் வீட்டு எஜமானர் ஓட்டமாக ஓடி வந்து, “குழந்தை எப்படி இருக்கிறாள்… டாக்டர்! நன்றாக பார்த்தீர்களா?” என்றார். “நன்றாகப் பார்த்தேன்; பயமில்லை” என்று பொதுவாகக் கூறினார். “டாக்டர். இங்கு வந்ததற்கு…” என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் சற்று கம்பீரமான தொனியில், “விஸிட்டிங் பீஸ் 25 ரூபாய் ; இந்த ஊசி குத்திய மருந்தின் விலை 15 ரூபாய்; இந்த மாத்திரை 10 ரூபாய்; ஆக 50 ரூபாய் கொடுக்க வேண்டும்”… என்றதைக் கேட்டதும், இத்தனை நேரம் தடபுடலாகப் பேசி, பல விஷயங்களையும் அறிந்து கொண்ட அந்த அம்மாளின் முகம் சுருங்கியது.

தன் கணவன் முகத்தைப் பார்க்கிறாள். அவர் மனைவியைப் பார்க்கிறார். இருவரையும் கடைக்கண்ணால் டாக்டர் பார்த்து, உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். தம்பதிகள் உள்ளே சென்று... “நான் வருவதற்குள் டெலிபோன் செய்து, இந்த டாக்டரை ஏன் அழைத்தாய்? நான்தான் ஓடி, ஓடி வருகிறேனே... இவன் பெரிய மொடா முழிங்கியல்லவா! பணக்காரர்களிடம் அட்டைபோல் உறிஞ்சும்