பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

132

போதும். ஒருவருடைய முறையீட்டிற்கு இரங்காவிடினும், மற்றொருவருடைய அவக்குரலுக்கு இரங்கி, அபயந் தர மாட்டானா! என்று நம்பித்தான் இருக்கிறேன்… அம்மா சுந்தரா!… நீயும் உன் முயற்சியினால், நம் குழந்தையின் விபத்தை நீக்கி, உதவினால் போதும். எந்தக் காரியமாவது செய்து, அவனை விடுதலை செய்து, அழைத்து வாருங்கள். மகா பாபியாகிய என் துரதிருஷ்டத்தின் பலனால் உண்டாகிய சோதனைகள் நீங்கி, உங்கள் போன்றவர்களின் நல்லெண்ணத்தினால், நன்மையாகவே முடிந்தால் போதும்" என்று கண்ணீர் விட்டாள்.

தாமோ:- உஷா! ‘நான் எத்தகைய முயற்சியும் செய்யக் கூடாது. பகவானே சத்தியத்திற்கு ஜெயமுண்டு என்பதை உலகத்திற்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்; நீ ஒன்றும் ப்ரயத்தனம் செய்யக் கூடாது’ என்று அண்ணா ப்ரமாணமாய் ஆணை வைத்துக் கட்டளை இட்டிருப்பதால், நான் எந்த விதமும் செய்ய முடியாமல் தவிக்கிறேன். நல்ல வேளையாய், நீயும் சின்னம்மாவும் வந்தீர்கள். அண்ணாவுக்குத் தெரியாமலேயே, முயற்சிகள் செய்து, வெற்றியைப் பெற வேண்டும். நீங்கள் இப்போதே அந்த இரண்டு சவங்களும் அடக்கமாவதற்கு முன்பே, நாயுடுகாருவைப் பார்த்து, விஷயத்தைச் சொல்லி விட வேண்டும்—என்றான்.

உடனே உஷாவும், அவள் தாயாரும் உத்திரவு பெற்றுச் சென்றார்கள். கமலவேணியம்மாளின் புகைந்து கொண்டு கிளம்பும் துக்கத்திலும், தனது சிறிய மகனின் மாறுதலும், சேர்ந்தாப் போல் உஷாவின் மாறுதலும், அபாரமான வியப்பைக் கொடுத்துத் தம்பிக்கச் செய்தன.

18

பார்ப்பதற்கு ஸ்ரீதரனும், தாமோதரனும் ஒரே சாயலாக கம்பீரத் தோற்றத்துடன் இருப்பார்கள். தர்ம வைத்ய சாலைக்கும், அனாதை நிலையத்திற்கும் இது வரையில்,