வை.மு.கோ.103-வது நாவல்
140
அவள் பிடிவாதமாக, என் விவாகத்திலேயே நிற்கிறாள். எனக்கோ, இதைப் பற்றி நினைக்கவும் பிடிக்கவில்லை. அம்மாவை எப்படியாவது சமாதானம் செய்து, தம்பிக்கு அவன் விரும்பும் பெண்ணையோ, அல்லது அன்று மாதவன் வீட்டில் பார்த்தவளையோ, மணம் செய்து வைத்தால், சந்தோஷமாயிருக்கும். என்ன செய்வேன்! என் மனத்திலுள்ள ஆவலை யறியாது, அவன் என்னை விரோதி போல் எண்ணுகிறானே! பகவான்தான் மாற்றி, நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். சகல சொத்துக்களையும் நான் அவனிடமே கொடுக்க, என்றும் தயாராயிருக்கிறேன். இப்போதே அவனிடம் கொடுத்து விட்டால், அநியாயமாய் அழித்து விடுவான்… அத்தகைய சகாக்களும், சந்தர்ப்பமும் நேர்ந்து விடும் என்ற பயத்தால், பேசாமலிருக்கிறேன். விவாகமாகி விட்டால், பொறுப்பு உண்டாகும். சொத்தைக் கொடுத்து விடலாம். கடவுள் என்னுடைய எண்ணத்தைப் பூர்த்தி செய்து வைக்க வேண்டும்.
தேதி…… மாதம்…
இன்று துரைக்கண்ணனுடைய உடம்பு குணமாகியதற்காக, இரண்டாயிரம். ரூபாய் தனது நன்கொடையாகக் கொடுத்தார். தர்ம வைத்திய சாலைக்கும், அனாதை நிலையத்திற்கும் உதவி கிடைத்தது பற்றிச் சந்தோஷந்தான். ஆனால், அவருடைய மகளை நான் மணக்க வேண்டுமென்று கேட்பதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனோதிடமும், சங்கல்பமும் பிறருக்கு எப்படித் தெரியும்? உம்!… கடவுள் க்ருபை கை கூடுமானால், அவரிஷ்டப்படி தம்பிக்கு மணம் முடிக்கலாம்… போகப் போகப் பார்ப்போம்.
தேதி…… மாதம்…
அடாடா! இத்தனை வயதான கிழவன் மனம் துணிந்து, நான்காந் தாரத்தை மணந்திருப்பது என்ன