பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141

சாந்தியின் சிகரம்

அநியாயம்! கிழவன் படுக்கையில் கிடக்கையில், அவனுடைய வ்யாதியைக் கூட மறந்து, அந்த நான்காந் தாரமாகிய பெண், என்னிடம் பேசுவதை எத்தனை விபரீதக் கண்களுடன் பார்த்து, அந்தப் பெண்ணைத் திட்டி, உள்ளே அனுப்பினான். இந்த ஆச்சரியந்தான் என்னெஞ்சை விட்டு அகலவேயில்லை. தகாத காரியம் செய்யும் எவருக்கும் புத்தி இப்படித்தானிருக்கும் போலும். தகாத சகவாஸம் செய்யாதே; பக்தியாயிரு; ஊதாரித்தனம் வேண்டாம் என்று நானும், அம்மாவும் எத்தனையோ சொல்லியும், தம்பி கேட்கிறானா? தான் செய்வது தெரியாமல், எங்கள் மீது கோபங் கூட வருகிறது! உலகமே இப்படித்தான் போலும். எப்படியாவது என் தம்பி நல்ல வழியில் திருந்தி, உலகம் போற்றக் கூடிய நிலைமைக்கு வந்து விட்டால் போதும்.

இதற்கு மேல், தாமோதரனால் படிக்க முடியாதுk கண்ணீர் முட்டித் தடுத்து விட்டது. தன் மீது, அண்ணனுக்கிருந்த அளவிட முடியாத விச்வாஸத்தின் ஆழத்தைப் பின்னும் நன்றாக அறிந்து கொண்டான். ‘உன்னுடைய மதிப்பையும், அன்பையும் இதுகாறும் அறியாத பாவியாக இருந்த நான், இனிமேல் அறிந்து கொண்டதைக் கைவிடாது, காப்பாற்றிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்து, பகவான் ரக்ஷிக்க வேணும்' என்று வேண்டிக் கொண்டான்.

அவ்வறையிலுள்ள சகலத்தையும் பார்த்தான். பீரோக்கள் நிறைய, வைத்ய சாஸ்திரப் புத்தகங்களும், உயர்ந்த ஞானததை வளர்க்கும் புத்தகங்களும் இருந்தனவேயன்றி, புத்தியை மயக்கும் குப்பை கூளங்கள் ஒன்று கூட இல்லாததைக் கண்டு வியந்தான். ‘இத்தகைய அண்ணனுடன் கூடப் பிறந்த பாவியான நான், எப்படியெல்லாம் நடந்து, அவருக்கும் மீளாப் பழியை உண்டாக்கி விட்டேன்’ என்று மனங் கலங்கியவாறு, தடதடவென்று தன்னறைக்குச் சென்றான். அங்கு மதியை மயக்கும் கண்ட கசடாப் படங்கள் நிறைந்த புத்தகங்கள், ஆபாஸப்