பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

சாந்தியின் சிகரம்

மாயின், நீங்களிருவரும் உடனே புறப்பட்டு வந்து சேருங்கள். கள்ள வேஷச் சாமியாரா யிருந்தவன், கொலைகாரனாகி விட்டதுடன் போதும்! ஏற்கெனவே, சந்தி சிரிக்கும் உன் சிறிய அண்ணனின் சகவாசமே வேண்டாம். மரியாதையாய்க் கிளம்பித் தாயார் வீட்டின் உறவைத் தலை முழுகி விட்டு வரவும். இன்று தவறினால் கூட, உங்களை இனி ஏற்றுக் கொள்ள முடியாது ஜாக்ரதை!”

என்று எழுதியிருந்ததைப் படித்ததும், தாமோதரனுடைய தலை மீது இடி இடித்த மாதிரி இருந்தது. “இத்தகைய படாப்பழியைத் தீர்க்கத் தாமும் முன் வந்து உதவி செய்து பாடுபடுவது போக, இப்படியா எழுதியிருக்கிறார்கள்! உலகத்தின் விசித்ரம் இதுதானா?”… என்று தனக்குள் குழம்பினான்.

தங்கைகளைத் தனியே அழைத்து, இந்த விஷயத்தைத் தாயாருடன் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்வதற்குள், கமலவேணியம்மாள் மிகவும் தீர்க்காலோசனை உடையவளாகையால், இப்படித்தானிருக்கும் என்று ஒருவாறு யூகித்துக் கொண்டு, “தாமோதரா! இப்படி வாப்பா! நீ உலகானுபவம் போறாதவன். நான் குட்டுப்பட்டுத் தேறியவள். கொலைகாரன் ஒரு அண்ணன்! சோதா—காமுகன்—இன்னொரு அண்ணன்! ஆகையால், உடனே வந்து விடும்படியாகத்தானே எழுதியிருக்கிறார்கள். மிக்க சந்தோஷம்… தம்பீ! உடனே தகுந்த நம் ஆளுடன் இவர்களைக் கூட்டி அனுப்பி விடு… போய் வாருங்களம்மா! நீங்களாவது கணவனுடன் சுகமாய் வாழுங்கள்! நான் பட்ட… படும்… அவஸ்தை போதும்! பெண்களுக்குத் தாய் வீட்டில் எத்தனைதான் உயர்விருப்பினும், அது பெருமையல்ல. கஞ்சிக்குப் பஞ்சாய்ப் பறந்தாலும், கணவன் வீட்டில் வாழ்வதுதான் பேரின்பம்… கண்ணியம்… சகலமும் ஆகும். அண்ணாவின் விதியும், என் விதியும் எப்படி பகவான்